India vs Pakistan: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி...!
Champions Trophy: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 49.4 ஓவர்களில் அந்த அணி, அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய 42.3 ஓவர்களில் 244 எடுத்து வெற்றி பெற்றது
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ரோகித் ஷர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து நிதானமாக விளையாடிய கில் 46 ரன்னில் அவுட் ஆன நிலையில், விராட்டுடன் இணைந்த ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் விளாசி 56 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலியின் அதிரடியால், இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 51 சதத்தை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியின் 51வது சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். இதேபோல், ஹர்த்திக் பாண்டியா சர்வதேச போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தொடர்ந்து, இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில், சாம்பியன் டிராபி தொடரிலிருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியது.
பாகிஸ்தான் அணிக்கு வரும் 27ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டி மட்டுமே மீதியுள்ளது. நடப்பு சாம்பியன் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது, அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?






