இப்படி ஒரு பாம்பையும், ஒரு பானையையும் வைத்து டிசைன் டிசைனாக வடை சுட்டு பாம்பாட்டி ஒருவர் நகையை திருடியுள்ள சம்பவம் அரியலூரை அரண்டு போகச்செய்துள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சினபுரம் காலனி அமைந்துள்ளது. அப்பகுதியில் பாம்பு, பை, பானை என பல பொருட்களை எடுத்து வந்த பாம்பாட்டி ஒருவர் தனக்கு தெரிந்த வித்தைகளை காட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சற்று நேரத்தில் அங்கு கூட்டம் சேர்ந்துவிட பாம்பை வைத்து தோஷம் கழிப்பதாக கூறி அங்கிருந்தவர்களிடம் பணம் பெற்றுள்ளார்.
அங்கிருந்த சிலர் பணத்தை கொடுத்தனர். அதனை பெற்ற உடன் தனது வித்தையை காட்டத்தொடங்கிய அந்த இளைஞர், ”நான் பாம்பை வெளியில் விடுவேன். அப்போது நீங்கள் இரண்டு காலையும் சேர்த்து வைத்து, கையை நீட்டி நில்லுங்கள்” என கூறினார். மேலும், இப்படி செய்வதால் அனைத்து தோஷமும் நீங்கிவிடும் எனவும் அவர் கூறிவுள்ளார்.
பின்னர் வித்தை காட்டி முடித்த பிறகு, வீட்டிற்கு வந்து தோஷத்தை நீக்குகிறேன்.. நீங்கள் அனைவரும் செல்லுங்கள் என அவர் கூறியுள்ளர். அதன்படி, அப்பகுதியில் வசிக்கும் ஜெயக்கொடி என்பவர் வீட்டுக்கு பாம்பாட்டி சென்றுள்ளார். ஜெயக்கொடியின் மகளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்பதை தெரிந்துக்கொண்ட அந்த பாம்பாட்டி, அப்பெண்ணுக்கு தோஷத்தை நீக்க 15 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.
அவர்கள் gpay செய்வதாக கூறியதால், அதனை மறுத்த பாம்பாட்டி நகையை கழற்றி வைக்க சொல்லியதாக தெரிகிறது. இதனை நம்பி, கழுத்தில் இருந்த முக்கால் சவரன் தங்கச் செயின் மற்றும் கால் பவுன் மோதிரத்தை கழட்டி வைத்துள்ளனர். இதனையடுத்து பூஜை போடுவது மாதிரி நடித்த அந்த இளைஞர்கள் ஜெயக்கொடி குடும்பத்தினர் அசந்த நேரம் பார்த்து சட்டென நகைகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து செந்துறை காவல் நிலையத்தில் ஜெயக்கொடி அளித்த புகாரில் போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிறிய பாம்பை வைத்து வித்தை காட்டி, அப்பாவி குடும்பத்திடம் இருந்து இளைஞர் ஒருவர் நகையை திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.