திரெளபதி முர்மு புதிய அறிவிப்பு.. பரபரக்கும் குடியரசு தலைவர் மாளிகை..!
ஜனாதிபதி திரௌபதி முர்மு, கே சஞ்சய் மூர்த்தியை இந்தியாவின் அடுத்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக (CAG) நியமித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உயர்கல்வி செயலாளர் கே. சஞ்சய் மூர்த்தியை அடுத்த கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலாக நியமித்துள்ளார். இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) வெளியிட்டுள்ளது.
கே சஞ்சய் மூர்த்தி தற்போது, கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறையின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். 1989 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான மூர்த்தி, ஆந்திரப் பிரதேச கேடரைச் சேர்ந்தவர். சஞ்சய் மூர்த்தி, நகர்ப்புற போக்குவரத்தை மேற்பார்வையிடும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பொறியியல் பட்டதாரியான சஞ்சய் மூர்த்தி, கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலாக பொறுப்பேற்க உள்ளர்.
கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலாக இருக்கும் தற்போதைய ஜி.சி.முர்மு வரும் வியாழன் கிழமை ஓய்வு பெறும் நிலையில், புதிய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலாக சஞ்சய் மூர்த்தி பதவியேற்க உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிஏஜியின் பொறுப்பை ஏற்றார் .
முர்மு CAG தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் லெப்டினன்ட் கவர்னராக பணியாற்றி உள்ளார். மேலும், மோடி முதல்வராக இருந்தபோது குஜராத் அரசாங்கத்தின் உள்துறைத் துறையில் பணியாற்றினார்.
இரயில்வே. பாதுகாப்பு, இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவை மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் சில மட்டுமே. இந்தியக் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் தணிக்கை செய்ய அதிகாரம் பெற்றுள்ளது.
கூடுதலாக, 1500 க்கும் மேற்பட்ட பொது வணிக நிறுவனங்கள், 400 க்கும் மேற்பட்ட வணிக சாராத தன்னாட்சி நிறுவனங்கள், மற்றும் உள்ளூர் மற்றும் யூனியன் அரசாங்க அமைப்புகளால் "கணிசமான நிதியுதவி" பெற்ற பிற அதிகாரிகள் மற்றும் அமைப்புகள், அத்துடன் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் ஆகியவை CAG இன் தணிக்கைக்கு உட்பட்டவையாக உள்ளது.
What's Your Reaction?