கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்குதா.. கவலை வேண்டாம்.. சிம்பிளா சரி பண்ணலாம்!

கரும்புள்ளிகள், கருமையான திட்டுக்கள் மறைய வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி என்ன செய்யலாம் என்று அழகு நிபுணர்கள் டிப்ஸ் கொடுத்துள்ளனர். அழகு நிலையங்களுக்கு சென்று பணத்தை செலவு செய்யாமல் வீட்டிலேயே ஈஸியாக கருந்திட்டுக்களைப் போக்கலாம்.

Aug 21, 2024 - 18:08
Aug 22, 2024 - 10:07
 0
கரும்புள்ளிகள் முகத்தின் அழகை கெடுக்குதா.. கவலை வேண்டாம்.. சிம்பிளா சரி பண்ணலாம்!
health and beaty tips

அழகாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். நல்ல நிறமாக இருக்கும் சிலருடைய முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள் தோன்றி மன உளைச்சலை ஏற்படுத்தும். என்ன செய்தால் கரும்புகள் மறையும் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள். நம்முடைய முக பொலிவிற்காக எத்தனையோ இயற்கையான வீட்டு சிகிச்சை முறைகளை பயன்படுத்தியிருப்போம். 


வாழைப்பழ தோல், ஆரஞ்ச் தோல்:

வாழைப்பழத்தின்  தோலின் உட்புறத்தை வைத்து முகத்தில் நன்றாக தேய்க்க வேண்டும்.  வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் படிப்படியாக மறையும். காய்ந்த ஆரஞ்சு தோலை பவுடர் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் அல்லது பால் ஊற்றி பேஸ்ட் போல் ஒரு மாஸ்க் தயாரித்து அதை முகத்தில் பூசி வர விரைவில் கரும்புள்ளி போய்விடும்.

முட்டை, கடலை மாவு:

முட்டையின் வெள்ளைக்கரு உடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து முகத்தில் நன்றாக பூசி உலர வைத்து பின் கழுவினால், அவை முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றுவதோடு, பருக்களால் ஏற்பட்ட கருமை திட்டுக்கள், கரும்புள்ளிகளை நீக்கும். இது அழகு குறிப்புக்கான டிப்ஸ் மட்டுமே. உடலில் வைட்டமின் சத்து குறைபாட்டினாலும் சிலருடைய முகத்தில் கருமையான திட்டுக்கள் புள்ளிகள் வரலாம். அதிகமாக அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகுவதன் மூலம் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.

எலுமிச்சை வெள்ளரிக்காய்:


எலுமிச்சை சாறுடன் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலக்கவும் கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் இந்த கலவையை தடவி 20 நிமிடங்கள் விடவும். வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும் வாரம் இரண்டு முறை இதை முயற்சி செய்யலாம். ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து தயிர் சமமாகக் கலந்து, அதனை முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை  கழுவ கரும்புள்ளிகள் மெல்ல மறையும்.வெள்ளரிக்காயை அரைத்து, அதனுடன் கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும். கரும்புள்ளி உள்ள பகுதிகளில் இந்த பேஸ்ட்டை தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து லேசான குளிர்ந்த நீரில் கழுவலாம். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைந்து பொலிவு பெறும்.

வேப்ப இலை:

வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவிடவும். அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில், கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் காயவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும்.  உருளைக்கிழங்கை அரைத்து அதன் சாறு எடுக்கவும். பஞ்சு கொண்டு அந்த சாறில் நனைத்து முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பளீச் என மாறும்.

கொத்தமல்லி இலை சாறு:

வீட்டில் கொத்தமல்லி இலை கண்டிப்பாக இருக்கும். மஞ்சள் முகப்பொலிவிற்கு ஏற்றது. கொத்தமல்லி இலையை கொஞ்சம் எடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். அந்த பேஸ்ட் நன்கு  காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். வாரம் ஒருமுறை இந்த கொத்தமல்லி இலையை பூசி வர முகம் பொலிவு பெறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow