பதக்கம் வெல்லும் முனைப்பில் இந்தியா! - பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்றைய போட்டிகள்: முழு விவரம்
Paris Olympics 2024 Schedule in Tamil : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன், துப்பாக்கிச் சுடுதல், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் இந்திய அணி கலந்துகொள்ள நிலையில், பதக்கம் வெல்லும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
Paris Olympics 2024 Schedule in Tamil : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். மனு பாக்கர் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பெற்றார். அத்துடன் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் படைத்தார்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஜப்பான் 4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 4 தங்கம், 2 வெள்ளி என 6 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், 3 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியா ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 22ஆம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தகுதிச் சுற்று மற்றும் அரையிறுதி தகுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்திய அணியினர் பங்கேற்கவுள்ள போட்டிகள் குறித்த விவரங்களை கீழே பார்க்கலாம்..
பேட்மிண்டன்:
மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் தகுதிச் சுற்றுப் போட்டியில், சாத்விக் சாய்ராஜ் & கிராக் ஷெட்டி இணை, ஜெர்மனியின் மார்க் லம்ஸ்ஃபஸ் & மர்வின் சிடெல் இணையுடன் மோதவுள்ளது.
பிற்பகல் 12.50 மணிக்கு நடைபெறவுள்ள பெண்கள் இரட்டையர் பேட்மிண்டன் தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அஷ்வினி பொன்னாப்பா & தனிஷா க்ரஸ்டோ இணை ஜப்பானின் நமி மட்சுயமா & சிஹரு ஷிடா இணையுடன் மோதவுள்ளது.
மாலை 05.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் குரூப் பிரிவு போட்டியில் லக்ஷயா சென் பெல்ஜியத்தின் ஜூலியன் கர்ரக்கி உடன் மோத உள்ளார்.
துப்பாக்கி சுடுதல்:
மதியம் 12.45 மணிக்கு நடைபெறவுள்ள 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி தகுதிச்சுற்று போட்டியில், சரோப்ஜித் சிங் & மனு பாக்கர், அர்ஜுன் சிங் & ரிதம் சங்வான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறவுள்ள 10மீ ஏர் ரைபிள் பெண்கள் குரூப் சுற்று போட்டியில் வீராங்கனை ரமிதா ஜிந்தல் பங்கேற்கிறார்.
பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெறவுள்ள 10மீ ஏர் ரைபிள் ஆண்கள் குரூப் சுற்று போட்டியில் அர்ஜுன் பபுதா பங்கேற்க உள்ளார்.
ஹாக்கி:
மாலை 05.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆண்கள் ஹாக்கிப் போட்டியின் ‘பி’ பிரிவு குரூப் சுற்றுப் போட்டியில், இந்தியாவும், அர்ஜெண்டினாவும் மோதவுள்ளது.
வில்வித்தை:
மாலை 06.31 மணிக்கு நடைபெறவுள்ள ஆண்கள் வில்வித்தை காலிறுதி போட்டியில், தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய் மற்றும் பிரவின் ஜாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதில் தகுதிபெறும் பட்சத்தில் ஆண்கள் அணி வீரர்கள் மாலை 07.17 மணிக்கு நடைபெறும் அரையிறுதி சுற்றுகளில் விளையாடுவார்கள். அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றால், இரவு 08.41 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்பார்கள்.
What's Your Reaction?