ராஜஸ்தானில் நடைபெறும் இந்திய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்பதற்காக தென் இந்தியாவில் 4 அணிகள் சென்றுள்ளன. தமிழகத்தில் சென்னையில் இருந்து வேல்ஸ் யூனிவர்ஸ்சிட்டி சார்பாக கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர்.
தற்போது ராஜஸ்தான் மாநிலம் குருர் ரோடு வித்யா நகரி சருலா தனியார் யூனிவர் சிட்டியில் நடைபெற்று வருகிறது. போட்டியின் போது தமிழக வீரர்களுக்கு சரியான பாயிண்ட்களும் போனஸ்களும் வழங்காமல் இருந்ததாக தெரிந்துள்ளது.
இந்நிலையில், இதனை தமிழக வீரர்கள் கேட்டபொழுது நடுவர்கள் முன்னிலையிலையே தமிழக வீரர்களையும் உடன் சென்ற பயிற்சியாளர்களையும் இருக்கைகள் கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்த நபரையும் தாக்குவதோடு மட்டுமல்லாமல், ’தமிழகம் செல்லுங்கள்’ என கடுமையாக திட்டியுள்ளனர். அநாகரிமாக நடந்துகொண்ட ராஜஸ்தான் வீரர்களின் வாய்ஸ் ரெக்கார்டை தமிழக வீரர்கள் பகிர்ந்துள்ளனர்.
தற்போது, எதற்காக தங்களை தாக்கினார்கள் என தெரியாமலும் தமிழகத்திற்கு திரும்பி செல்வோமா?’ என அறியாமலும், தமிழக வீரர்கள் பயத்தில் உள்ளனர்.