துரைமுருகன் லூசு போல் பேசுவார்.. திமுக சின்னப்பிள்ளை தனமாக நடந்து கொள்கிறது - கரு.நாகராஜன் தாக்கு
Karur Nagarajan Critize Duraimurugan : நிதி ஆயக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஏன் செல்லவில்லை? சின்ன பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல மாட்டேன் என்பது போல இருக்கிறது என்று பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Karur Nagarajan Critize Duraimurugan : சென்னை சூளைமேட்டில் பாரதிய ஜனதா கட்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கரு.நாகராஜன், “மத்திய பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் அனைத்தும் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. நிதி ஆயக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஏன் செல்லவில்லை? சின்ன பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு செல்ல மாட்டேன் என்பது போல இருக்கிறது. நிதி ஆயக் கூட்டத்திற்கு சென்று மெட்ரோ திட்டத்தை பற்றி பொய் சொல்ல முடியாது, வீட்டைப் பற்றி பேச முடியாது. எங்கு சென்றாலும் தமிழை பற்றி பாரத பிரதமர் பேசி வருகிறார். அவர் தமிழைப் பற்றி பேசாத இடம் எங்கேயும் உள்ளதா?
மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு என்ன கொடுக்க வேண்டுமோ, அதனை 100 சதவீதம் கொடுத்து விட்டது. தமிழ்நாட்டில் நடக்கும் படுகொலை பற்றி யாரும் சிந்திக்க கூடாது என்று இப்படி திசை திருப்புகிறார்கள்.
சாராய படுகொலை திசை திருப்பவே மெட்ரோ திட்டம், நீட் போன்ற திட்டங்களை கையில் எடுக்கிறார்கள். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அன்று கோஷம் இட்ட நீங்கள், இன்று கோஷம் இடுங்கள். திமுக கட்சிக்கு எதிராக மூன்று திமுக ஃபைல் வெளியிட்டோம். அதற்கு நீங்கள் மறுத்து பேச யாரும் தயாராக இல்லை.
காங்கிரஸ் வெட்கமில்லாத கட்சி. திமுக அரசு செய்வதை கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் போன்றவை எதையும் தட்டிக் கேட்பதில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பற்றி பேசவில்லை, திருக்குறளைப் பற்றி பேசவில்லை என்று சொல்லி வருகிறீர்களே வெட்கமா இல்லையா உங்களுக்கு? தர்மத்தை நிலை நிறுத்துவது தான் செங்கோல். அதனைப் பற்றி தவறாக பேசுபவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளார்கள்.
தமிழ்நாட்டிற்கு நீங்கள் என்ன நல்லது செய்துள்ளீர்கள், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எப்போதும் லூசு போல பேசுவார். மேகதாது அணை கட்ட அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைப் பற்றி நீங்கள் பாராட்டியது உண்டா?
29 லட்சம் பேர் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு செல்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஊழல் செய்தது தெரியும். அவர்களுக்கெல்லாம் தற்போது நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகிறார் மோடி. தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு 21 லட்சம் பேருக்கு உதவி தொகை வழங்கி வருகிறோம்.
பத்து ஆண்டுகளில் 10 லட்சம் கோடிகளை தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார் மோடி அவர்கள், அவருக்கு இருக்கின்ற குடும்பம் இந்தியா தான். பட்ஜெட்டை பத்தி நீங்கள் சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, உலகமே இதற்கு சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
திமுக கட்சி தேர்தலின் போது சொன்ன எதையும் வெற்றி பெற்ற பிறகு செய்யவில்லை. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம் பாரதப் பிரதமர் உருவாக்க திட்டம் தீட்டியுள்ளார். இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாடு பேர் இல்லை என்று கூறுகிறீர்கள்” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?