Gold price: இறங்க மனமில்லாத தங்கம்- மீண்டும் விலை உயர்வு!
சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புக்கொண்ட ஒரு சவரன் ரூ.66,000 ஆக விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.65,680 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வரும் தங்கத்தின் விலையானது இன்றே ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 வரை அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440, ரூ.360 என ஒரே நாளில் பன்மடங்கு அதிகரித்து வரும் போக்கு நிலவுவது பொதுமக்களிடையே கவலையினை உண்டாக்கியுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.
கடந்த ஒரிரு மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறி வந்தது. கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் வகையில், வாரத்திற்கு ஒரு முறை , இரு முறை இறக்கம் கண்டது தங்கத்தின் விலை. அந்த வகையில் மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளத்தின் கதையாக தொடர்ந்து தங்கத்தின் விலை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை என்ன?
நேற்றைய தினம் சென்னையில், 22 கேரட் மதிப்புள்ள ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,210 ஆக விற்ற நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.40 வரை அதிகரித்து ரூ.8,250 ஆக விற்பனையாகிறது. மார்ச் மாதம் தொடங்கியது முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 10 நாட்கள் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது நடுத்தர வர்க்க மக்களிடையே கவலையினை உண்டாக்கியுள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.320 வரை அதிகரித்து சென்னையில் இன்று 22 கேரட் மதிப்புக்கொண்ட ஒரு சவரன் ரூ.66,000 ஆக விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரன் ரூ.65,680 ஆக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து இனி வரும் காலங்களில் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






