வெள்ளாடு வளர்ப்பில் பிசினஸ் பண்ண ஆசையா? சூப்பர் வாய்ப்பு காத்திருக்கு..
வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபட விரும்புவோர் வருகிற 21.03.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்ப்பட்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் வெள்ளாடு வளர்ப்பு குறித்த சுயவேலை வாய்ப்புப் பயிற்சி (15 நாள்கள்) வழங்கப்பட உள்ளது. இதுத்தொடர்பான அறிவிப்பின் விவரம் பின்வருமாறு-
தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட வன அலுவலகம் அருகில் இயங்கிவரும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ”வெள்ளாடு வளர்ப்பு” குறித்த 15 நாள்கள் பயிற்சி 01.04.2025 முதல் 23.04.2025 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், வேளாண் பெருமக்கள் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
பயிற்சியில் பங்குபெற கீழ்காணும் ஆவணங்களையும் கட்டணத்தையும் பயிற்சி மையத்தில் 21.03.2025 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
1. ஆதார் அட்டை நகல்
2. மார்பளவு வண்ண புகைப்படம் (Passport size photo) - 2 Nos.
3. பயிற்சிக் கட்டணம் ரூபாய் 3000/-
பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
வெள்ளாட்டினங்கள், கொட்டகை அமைப்பு, தீவனமளித்தல், இனவிருத்தி முறை, தடுப்பூசி மற்றும் நோய் மேலாண்மை, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், பொருளாதாரம் உள்ளிட்ட தலைப்புகளில் விரிவான கலந்துரையாடல்.முன்னோடி பண்ணையார்களின் பண்ணைகளுக்குச் சென்று நேரிடையான கலந்துரையாடல். வெள்ளாடு வளர்ப்பு குறித்த புத்தகம் வழங்கப்படும். பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 04362-264665 / 86080 22116 என்ற எண்களில் காலை 10 மணிக்கு மேல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொள்ளவும்.
Read more: 3-வது கார் வாங்க போறவங்களுக்கு சிக்கல்: டெல்லி எடுக்கப்போகும் அதிரடி முடிவு
What's Your Reaction?






