ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் உரிமை, சாதனை, பாலின சமத்துவம் மற்றும் அவர்களின் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அரசியல் பிரதிநிதிகள், பிரபலங்கள் என பலரும் தங்களது சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினரான கனிமொழி சர்வதேச மகளிர் தினம் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமமாக பார்க்கும் தைரியம் அவர்களுக்கில்லை:
அவரது பதிவில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு: “உண்மையான சுதந்திரம் என்பது நமக்கு சொந்தமான விஷயங்களுக்கு போராட வேண்டிய அவசியமில்லாதது தான். நம் வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம், தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம், பலவீனமான பாலினமாக முத்திரை குத்தப்பட்டுள்ளோம். கட்டமைக்கப்பட்டுள்ள பழமையான சாத்திர, சம்பிராதயங்களுக்காக நாம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறோம். நாம் துன்பப்படுகிறோம், அதே நேரம் நாம் மௌனமாக்கப்படுகிறோம்.
அவர்கள் நம்மை உயர்த்துவது போல் நடிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் நம்மை சமமாகப் பார்க்கும் தைரியம் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. நமக்கு ரோஜாக்களின் நாட்களோ அல்லது வெற்று வார்த்தைகளோ தேவையில்லை. நமது இருப்பு ஒரு விவாதமாக இல்லாத உலகம் தான் நமக்கு தேவை” என பதிவிட்டுள்ளார். எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Real freedom is when we don’t have to fight for what is rightfully ours.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 8, 2025
All our lives, we’ve been commanded, categorized, and controlled. We have been branded the weaker sex, our dignity has been paraded, to serve archaic narratives. We are abused, yet blamed. We suffer, yet we…
ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச மகளிர் தினம்' ஒரு கருப்பொருளை மையமாக வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான கருப்பொருளானது "செயல்களை துரிதப்படுத்து" என்பதாகும். இந்த கருப்பொருளானது பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புகள் குறித்து வேகமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது.
Read more:
சர்வதேச மகளிர் தினம் 2025: எப்படி உருவானது பெண்கள் தினம்? முக்கிய நோக்கம் இதுதான்!
இயக்குநர் ராஜு முருகன் மனைவியை டார்ச்சர் செய்த நிர்வாகிகள்.. கேள்வி எழுப்பியதால் ஆத்திரம்