மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் ஞானசேகரனை கைது செய்த காவல்துறையினர் சென்னை சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுல்தான் ஹர்கான், ஞானசேகரனை ஜனவரி 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் அதிமுக, பாமக, தேமுதிக, தவெக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஞானசேகரனிடம் விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து குற்றவாளி ஞானசேகரனின் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சோதனை மேற்கொண்டு சொத்து ஆவணங்கள், பட்டா கத்தி, ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை இரண்டு அட்டை பெட்டிகளில் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
பட்டாக்கத்தியை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஞானசேகரனின் ஜீப் மற்றும் பிரியாணி கொண்டு செல்ல பயன்படுத்தும் சரக்கு ஆட்டோ ஆகியவற்றை முறையாக பைனான்ஸ் கட்டாததால் நிறுவனத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தும் இரு சக்கர வாகனத்தை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நேற்று இரண்டு மனைவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர் பகுதியில் உள்ள வீடு எப்பொழுது வாங்கப்பட்டது? செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பாக்கத்தில் தண்டராம்ஞ்சேரி என்ற ஊர் சொந்த ஊர் எனவும் அங்கு எவ்வளவு சொத்துகள் வாங்கியுள்ளனர்? ஞானசேகரன் மற்றும் அவரது இரண்டு மனைவிகளின் வங்கி பரிவர்த்தனையும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?