அடுத்தடுத்த சர்ச்சை - பாம்பை கையில் சுற்றிய டிடிஎஃப் வாசன் 

பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் காரில் பயணித்தபோது பால் பைதான் என்ற மலைப்பாம்புடன் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Dec 30, 2024 - 12:02
Dec 30, 2024 - 14:26
 0
அடுத்தடுத்த சர்ச்சை - பாம்பை கையில் சுற்றிய டிடிஎஃப் வாசன் 
அடுத்தடுத்த சர்ச்சை - பாம்பை கையில் சுற்றிய டிடிஎஃப் வாசன் 

 பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.  தற்போது மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பை கையில் சுற்றியபடி காரில் பயணித்தபோது பால் பைதான் என்ற மலைப்பாம்புடன் விளையாடிக்கொண்டே சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வீடியோ தொடர்பாக வனத்துறை விசாரணை நடத்திவரும் நிலையில், டிடிஎஃப் வாசனிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி அதை வீடியோவாக தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களிடையே கவனம் பெற்று வந்தார். கடைத்திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டிடிஎஃப் வாசன் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர் செல்லும் இடங்களில் எல்லாம், அதிகளவில் ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக்கூறி இவர் மீது வழக்கு பதியப்பட்டது.

பின்னர் அதிவேகமாக பைக் ஓட்டுவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது என தொடர்ந்ததால், காவல்துறை இவருக்கு பலமுறை எச்சரிக்க விடுத்த நிலையில், வேகமாக பைக் ஓட்டுவது, இரண்டு கைகளையும் விட்டுவிட்டு பைக் ஓட்டுவது என அடுத்தடுத்த வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். இதனால் பைக் ரேஸரான வாசனுக்கு 10 ஆண்டுகள் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு தடை விதித்து  வழக்கு ஒன்றில் நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. தடையை தொடர்ந்து, டி.டி.எஃப் வாசன் தனது கார் மூலமாக ஊர் சுற்றி வந்தார். இந்நிலையில், விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

யூடியூபர் டிடிஎஃப் வாசன்,  எப்போதும் வழக்கு, ஜாமின் என்று சுற்றி வரும் நிலையில், தற்போது புதிதாக தனது கையில் பாம்பு ஒன்றை சுற்றியபடி காரில் பயணம் செய்யும் வீடியோ வெளியான நிலையில், அதுதொடரபாக வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அனுமதி பெறாமல் பாம்பை வளர்க்க முடியாது என்பதால் விசாரணை நடத்தி அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow