புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலினால் 4 பேர் உயிரிழப்பு - மாவட்ட ஆட்சியர்
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, வரலாறு காணாமல் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக புதுச்சேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் இதுவரை 551 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு 47 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இதனால், புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். மேலும், மழை வெள்ளத்தில் சிக்கி புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், இன்று அதிகாலை வரை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரியில் நேற்று இரவு முதல் தற்பொழுது வரை காற்றுடன் கூடிய கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்தன மேலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது.
குறிப்பாக ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் வெங்கட்ட நகர், முதலியார் பேட்டை முத்தியால்பேட்டை உப்பளம் ரோடியார்பேட் ராஜ் பவன் உள்ளிட்ட பல்வறு பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் அங்கிருக்க கூடிய மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 48.45 செ.மீ மழை பெய்துள்ளது. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 551 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர் அதன்படி உயிர் இழந்தவர்கள் கோவிந்த சாலை, லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் பாகூர் பகுதியில் 15 குடிசை வீடுகளும், வில்லியனூர் மற்றும் பாகூர் தொகுதிகளில் தலா ஒரு கல் வீடு சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தகவல் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?