நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2வது முறையாக முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 7, 2024 - 03:07
Jul 8, 2024 - 18:23
 0
நில மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
MR Vijayabaskar Land Fraud Case Bail Plea Dismissed

கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் மீது கரூர் நகர போலீசார் புகார் மனு அளித்தார் இந்நிலையில் வாங்கல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த 1-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  6 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி ஜாமீன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். தற்பொழுது முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் பத்திற்கும் மேற்பட்ட சிபிசிஐடி தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தனது தந்தை ராமசாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கவனித்துக் கொள்ள இடைக்கால ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு மீண்டும் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் மனு மீதான விசாரணையை நான்காவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow