மன அழுத்தத்தைப் போக்க பெட்ரோல் அருந்தும் இளம்பெண் - அட இப்படி ஒரு வியாதியா?..
"இது பாதுகாப்பானது அல்ல என்று எனக்குத் தெரியும், அது என்னைக் கொல்லப் போகிறது என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இன்னும் என்னால் நிறுத்த முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
20 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக தினசரி பெட்ரோல் அருந்தும் விநோத செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பரபரப்பான நவீன உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்தால் பாதிப்படைந்து வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பின்மை, வறுமை, கடன், தொழில் ரீதியான பிரச்சனை, பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நெருக்கடி, ஆரோக்கியமின்மை, உடல்நலக் குறைவு, முறையான உறக்கமின்மை ஆகியவற்றினால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இதனால், கடுமையான சோர்வு, தலைவலி, முதுகுவலி, ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவது, ரத்த அழுத்தம், நீரிழிவு, வாதம், மாரடைப்பு, ஜீரணக் கோளாறுகள் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக மன அழுத்தம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களின் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு மன அழுத்தமே காரணம் என்றும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு கூட மன அழுத்தம் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால், அது மன அழுத்தமாக மாறிவிடும் என ஒரு தனியார் யோகா அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்படி மன அழுத்தத்திற்கு ஆளான கனடா நாட்டைச் சேர்ந்த ஷானோன் என்ற இளம்பெண் தனது மன அழுத்தத்தைப் போக்குவதற்காக, அது தனது உடலுக்கு தீங்கானது என்று தெரிந்திருந்தும் தினசரி பெட்ரோல் அருத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷானோன் கூறுகையில், பெட்ரோல் அருந்துவதால் மனச்சோர்வின் அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது என்றும் மேலும் அவர் குமட்டல், வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி இருந்தபோதும், தினமும் 12 ஸ்பூன் பெட்ரோல் அருந்துவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், இந்த ஆபத்தான போதை உங்கள் செரிமான பாதை, இதயம் மற்றும் நுரையீரலை சேதப்படுத்தும், இது உயிருக்கு ஆபத்தான நோய்கள் மற்றும் விஷத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்செயலாக பெட்ரோலை விழுங்குவதைக் கூட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு மாறாக ஷானோன் காலையில் எழுந்தவுடன், குளியலறையின் தொட்டியின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற பெட்ரோல் டப்பாவை எடுத்து, அதில் உள்ள பெட்ரோலை அருத்துவதை அவர் தினசரி பழக்கமாக வைத்துள்ளதாக அங்குள்ள பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தனக்கு ஏற்படப்போகும் ஆபத்துகள் பற்றி அறிந்திருப்பதாகவும், நெஞ்சு வலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற வலிகள் ஏற்படுவதாகவும் கூறினாலும் அதனை தன்னால் நிறுத்த முடியவில்லை என்றும் இந்த கொடிய போதையிலிருந்து விடுபட முடியவில்லை என்றும் இளம்பெண் ஷானோன் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து கூறியுள்ள இளம்பெண் ஷானோன், "இது பாதுகாப்பானது அல்ல என்று எனக்குத் தெரியும், அது என்னைக் கொல்லப் போகிறது என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இன்னும் என்னால் நிறுத்த முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இதன் சுவை இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த சாஸ் போன்று உள்ளது. முதலில் கூச்ச உணர்வை ஏற்படுத்தும்.. பின்னர் அது என் தொண்டையின் பின்புறத்தில் எரிச்சலூட்டும். ஆனாலும், இது இல்லாமல் ஒரு நாள்கூட இருக்க முடியாது. வேறு எங்காவது சென்றால் கூட, சிறிய தண்ணீர் பாட்டிலில் எடுத்துச் சென்றுவிடுவேன்" என்று கூறினார்.
20 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் மன அழுத்தத்தைப் போக்குவதற்காக தினசரி பெட்ரோல் அருந்தும் விநோத செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பரபரப்பான நவீன உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்தால் பாதிப்படைந்து வருகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பின்மை, வறுமை, கடன், தொழில் ரீதியான பிரச்சனை, பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நெருக்கடி, ஆரோக்கியமின்மை, உடல்நலக் குறைவு, முறையான உறக்கமின்மை ஆகியவற்றினால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இதனால், கடுமையான சோர்வு, தலைவலி, முதுகுவலி, ரத்த அணுக்கள் பாதிக்கப்படுவது, ரத்த அழுத்தம், நீரிழிவு, வாதம், மாரடைப்பு, ஜீரணக் கோளாறுகள் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக மன அழுத்தம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களின் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு மன அழுத்தமே காரணம் என்றும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு கூட மன அழுத்தம் முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது, அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும். இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும். ஆனால், இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால், அது மன அழுத்தமாக மாறிவிடும் என ஒரு தனியார் யோகா அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்படி மன அழுத்தத்திற்கு ஆளான கனடா நாட்டைச் சேர்ந்த ஷானோன் என்ற இளம்பெண் தனது மன அழுத்தத்தைப் போக்குவதற்காக, அது தனது உடலுக்கு தீங்கானது என்று தெரிந்திருந்தும் தினசரி பெட்ரோல் அருத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷானோன் கூறுகையில், பெட்ரோல் அருந்துவதால் மனச்சோர்வின் அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது என்றும் மேலும் அவர் குமட்டல், வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி இருந்தபோதும், தினமும் 12 ஸ்பூன் பெட்ரோல் அருந்துவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், இந்த ஆபத்தான போதை உங்கள் செரிமான பாதை, இதயம் மற்றும் நுரையீரலை சேதப்படுத்தும், இது உயிருக்கு ஆபத்தான நோய்கள் மற்றும் விஷத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்செயலாக பெட்ரோலை விழுங்குவதைக் கூட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு மாறாக ஷானோன் காலையில் எழுந்தவுடன், குளியலறையின் தொட்டியின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற பெட்ரோல் டப்பாவை எடுத்து, அதில் உள்ள பெட்ரோலை அருத்துவதை அவர் தினசரி பழக்கமாக வைத்துள்ளதாக அங்குள்ள பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தனக்கு ஏற்படப்போகும் ஆபத்துகள் பற்றி அறிந்திருப்பதாகவும், நெஞ்சு வலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற வலிகள் ஏற்படுவதாகவும் கூறினாலும் அதனை தன்னால் நிறுத்த முடியவில்லை என்றும் இந்த கொடிய போதையிலிருந்து விடுபட முடியவில்லை என்றும் இளம்பெண் ஷானோன் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஷானனின் கூற்றுப்படி, பெட்ரோல் மீதான அவரது காதல் அவளுக்கு ஐந்து வயதாக இருந்தபோது ஆரம்பித்துள்ளது. தாயின் காரிலிருந்து வெளியேறும் பெட்ரோல் புகையின் வாசனையை விரும்பி, அதனை சுவாசிக்க ஆரம்பித்துள்ளார். இறுதியில் அவள் "வருத்தமாகவும், தனியாகவும்" உணர்ந்தபோது சிறிது சிறிதாக இவ்வாறு செய்ய முயற்சித்து இந்த பழக்கத்திற்கு அடிமையாக்கியுள்ளது.
What's Your Reaction?