2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக ஆர்டர்.. அதிகார பரவல்.. இபிஎஸ் மாஸ்டர் பிளான் ஜெயிக்குமா?

அதிமுகவில் ஒரு வட்டத்துக்கு ஒரு கிளை செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aug 2, 2024 - 08:18
Aug 3, 2024 - 10:11
 0
2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக ஆர்டர்.. அதிகார பரவல்.. இபிஎஸ் மாஸ்டர் பிளான் ஜெயிக்குமா?
Edapadi Palanisamy

சென்னை: 

2026 சட்டசபை தேர்தலுக்கு அதிமுக தயாராகி விட்டது. தேர்தலில் வெற்றி பெற கட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் எனவும், ஒரு வட்டத்துக்கு ஒரு கிளை செயலாளர் நியமிக்கப்பட வேண்டும், அந்த பதவிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டசபை தேர்தல்: 

2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் அதிவேகமாக பயணிக்கத் தொடங்கிவிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இப்போதே பஞ்சாயத்தை ஆரம்பித்து விட்டது காங்கிரஸ் கட்சி. அதிக இடங்களை கேட்டு பெற்று வென்று கூட்டணி ஆட்சியில் இடம் பெற வேண்டும் என்பது தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களின் எண்ணமாக உள்ளது. 

திமுகவின் வெற்றிப் பயணம்:

2019முதல் 2024 வரை வலிமையான கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரும் வெற்றியை பெற்றுள்ளது திமுக. 2 மக்களவை தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது திமுக.  2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக இப்போதே ரகசியமாக பணிகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. கூட்டணியில் சலசலப்பு இருந்தாலும் யாரும் யாரையும் விட்டு விலகமாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. 

அதிமுக புதிய கூட்டணி:

அதே நேரத்தில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்புள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. பாஜக உடன் கூட்டணி இல்லை என்று பலமுறை வெளிப்படையாகவே அறிவித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து தினசரியும் மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 

தேர்தல் தோல்வி ஆலோசனை: 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் குறித்த ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்றைய தினம் நடைப்பெற்றது.

வலிமையான கூட்டணி: 

கூட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்தும், குறிப்பாக தென் சென்னையில் டெபாசிட் இழக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டது ஏன் என எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசிய நிர்வாகிகள், கூட்டணி வலுவாக அமையாதது முக்கிய காரணமாக தெரிவித்துள்ளனர். மேலும் கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகளும் முக்கிய காரணம் என சிலர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகார பரவல்: 

இறுதியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் எனவும், ஒரு வட்டத்துக்கு ஒரு கிளை செயலாளர் நியமிக்கப்பட வேண்டும், அந்த பதவிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு தயாராகுங்கள்: 

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இப்போதிலிருந்தே பணியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்திய எடப்பாடி பழனிசாமி, கட்சி பணி முறையாக செய்யாத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வலிமையான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மட்டுமே ஆட்சியை கைப்பற்றி அரியணை ஏற முடியும் என்பது நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. 

அதிமுக கூட்டணி யாருடன்?

சட்டசபை தேர்தலில் அதிமுகவும் தற்போதைக்கு 8 சதவிகித வாக்கு வங்கி வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைத்தால் திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். அதிமுக ஆளுங்கட்சி வரிசையில் அமரும் அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு டபுள் டிஜிட் எம்.எல்.ஏக்கள் கிடைத்தும் விடுவர்; இதனால் நாம் தமிழர் கட்சி அடுத்தடுத்து வலிமையான சக்தியாக உருவெடுக்கும் என்றும் கூறுகின்றனர்.

பலமுனை கூட்டணி யாருக்கு பலன்?

அதிமுக- நாம் தமிழர் கூட்டணி அமையாமல் போனால் அதாவது திமுக தலைமையிலான தற்போதைய கூட்டணி நீடிக்கும் பட்சத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சொன்னது போல அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. ஆகியவை தனித்தனியே களம் காணும் நிலை ஏற்பட்டாலோ  2026 தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியால் எளிதாக 200-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றிவிட முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியமாக காய் நகர்த்துவாரா பார்க்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow