LuckyBaskhar Review: தீபாவளி பிளாக் பஸ்டர்... சொல்லி அடித்த துல்கர் சல்மான்... லக்கி பாஸ்கர் விமர்சனம்!
துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என இப்போது பார்க்கலாம்.
சென்னை: தனுஷின் வாத்தி திரைப்படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. அவரது இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். தெலுங்கில் உருவாகியுள்ள லக்கி பாஸ்கர், தமிழ் உட்பட பான் இந்தியா மொழிகளில் இன்று ரிலீஸாகியுள்ளது. தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கரும் களமிறங்கியுள்ளது. அதிக எதிர்பார்ப்பில்லாமல் வெளியான லக்கி பாஸ்கர், இந்தாண்டு தீபாவளி பிளாக் பஸ்டர் மூவி என ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
பீரியட் ஜானரில் 1992 ஸ்கேம்-ஐ பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் படத்துக்கு, ரசிகர்கள் 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளனர். இந்தப் படம் குறித்து டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ள சோஷியல் மீடியா ட்ராக்கர் ராஜசேகர், லக்கி பாஸ்கர் திரைக்கதை, மேக்கிங் இரண்டும் அட்டகாசம், பைனான்ஸியல் க்ரைம் த்ரில்லர் மூவியாக உருவாகியுள்ளது. துல்கர் சல்மானின் நடிப்பு தரம், வெங்கி அட்லூரியின் கரியரில் பெஸ்ட் மூவியாக லக்கி பாஸ்கர் இருக்கும், ஸ்க்ரிப்ட் ஒர்க் அவ்வளவு நேர்த்தியாக உள்ளது என பாராட்டியுள்ளார். அதேபோல், மீனாட்சி செளத்ரியின் கேரக்டர், நடிப்பு, ஜிவி பிரகாஷின் இசை அனைத்தும் சூப்பர் என விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல், சோஷியல் மீடியா ட்ராக்கர் அமுதபாரதியும் லக்கி பாஸ்கர் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார். திரைக்கதை தான் லக்கி பாஸ்கர் படத்தின் பலம், ஸ்கிரிப்ட் ரிசர்ச் செய்து சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. படம் முழுக்க துல்கர் சல்மான் தனது நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை நன்றாக வந்துள்ளது, இடைவேளை, க்ளைமேக்ஸ் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுடன் இன்னும் சூப்பர். ஒருசில காட்சிகளில் லாஜிக் இல்லையென்றாலும், ஒட்டுமொத்தமாக தரமான மூவி என விமர்சனம் செய்துள்ளார். மேலும் லக்கி பாஸ்கர் படத்துக்கு 3.75 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார்.
லக்கி பாஸ்கர் படம் செம பவர்ஃபுல்லான மேக்கிங். முதல் பாதியை விடவும், இரண்டாம் பாதியில் ஏராளமான ட்விஸ்ட் உள்ளன. வெங்கி அட்லூரியின் மேக்கிங், திரைக்கதை இரண்டும் மாஸ்டர் மைண்ட் ஒர்க். ஹர்ஷா மேத்தாவின் ஸ்கேம்-ஐ பின்னணியாக வைத்து உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் சூப்பர் ஹிட் என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். அதேபோல், இந்த தீபாவளி வின்னர் லக்கி பாஸ்கர் தான் என இன்னொரு நெட்டிசன் கருத்துத் தெரிவித்துள்ளார். ரொம்ப சிறப்பாக எழுதப்பட்ட திரைக்கதை, துல்கர் சல்மான் உட்பட அனைவரும் சூப்பராக நடித்துள்ளனர் என பாராட்டியுள்ளார்.
அதேநேரம் லக்கி பாஸ்கர் ஆவரேஜ் மூவி என Let's X OTT GLOBAL தளம் விமர்சனம் செய்துள்ளது. எப்போதும் போல துல்கர் சல்மானின் வழக்கமான நடிப்பு, ஜிவி பிரகாஷின் பிஜிஎம் தான் இந்தப் படத்தின் முதுகெலும்பாக உள்ளது. இரண்டாவது பாதி இன்னும் நன்றாக வந்திருக்கலாம், சில காட்சிகள் லேகிங் என விமர்சித்துள்ளது. லக்கி பாஸ்கர் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே அதிகம் கிடைத்துள்ளன. இந்த தீபாவளியில் லக்கி பாஸ்கர் தான் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் என்றும், துல்கர் சல்மானுக்கு இது தரமான கம்பேக் எனவும் பாராட்டி வருகின்றனர்.
What's Your Reaction?