நாளிதழில் பெயர் இல்லை.. கூட்டத்தை புறக்கணித்த நிர்வாகிகள்.. திமுகவில் சலசலப்பு
முரசொலி நாளிதழில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பெயர் போடவில்லை என பாக முகவர்கள் கூட்டத்தை புறக்கணித்த திமுக வட்ட செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி சார்பில் பாக முகவர்கள் கூட்டம் சென்னை பெருங்குடியில் நடைபெற்றது. மேற்கு பகுதி செயலாளர், சென்னை மாநகராட்சி 14வது மண்டலக் குழு தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உட்கட்சி காரணமாக திமுக வட்ட செயலாளர்கள் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தது கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தொகுதி பொறுப்பாளர் சந்திரபாவுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முரசொலி நாளிதழில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியில் நடைபெறும் கூட்டம் குறித்து வெளியானது. அந்த அறிவிப்பு செய்தியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் பெயர் விடுபட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் கூட்டத்தை முழுவதுமாக புறக்கணித்தனர்.
முன்னதாக சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள திமுக வட்ட செயலாளரின் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்ததாக அறிவித்த நிலையில் சட்டமன்ற உறுப்பினரை புறக்கணித்ததால், கூட்டம் நடத்த மறுப்பு தெரிவித்து வட்ட செயலாளர் கூட்டத்தையும் புறக்கணித்தார்.
பகுதி செயலாளரின் ஆதரவாளர்கள் ஐந்து வட்ட செயலாளர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அதேபோல் நான்கு வட்ட செயலாளர்களும், ஐந்து திமுக மாமன்ற உறுப்பினர்களும் திமுக உட்கட்சி பூசலால் பாக முகவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
திமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் கட்சி நிர்வாகிகளிடம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
What's Your Reaction?