ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல வேண்டாம்... பொதுமக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்!

ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Oct 24, 2024 - 23:24
 0
ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல வேண்டாம்... பொதுமக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்!
ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல வேண்டாம்... பொதுமக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்!

வரும் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தங்களது சொந்த கார்களில் பயணிப்பவர்கள் தவிர்த்து, ரயில்கள், பேருந்துகள் மூலமாகவும் ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு மற்றும் பிற அபாயகரமான பொருட்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க, சென்னை கோட்டத்தில் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன:

  • முக்கிய ரயில் நிலையங்களில் CCTV கண்காணிப்பு, கூடுதல் பாதுகாப்பிற்காக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
  • ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தீவிர கண்காணிப்பில் மோப்ப நாயுடன் கூடிய சிறப்பு படையினரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
  • பட்டாசுகளை எடுத்துச் செல்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு, ரயில் நிலையங்களில் RPF குழுவால் நடத்தப்படுகிறது.
  • புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், டிக்கெட் இல்லாமல் பயணிப்பதையும், அங்கீகரிக்கப்படாத பயணிகளையும் தடுப்பதற்காக, தீவிர டிக்கெட் சோதனைக் குழுவினால் டிக்கெட் சரிபார்ப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
  • ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்
  • ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவு 67, 164 மற்றும் 165-ன் படி, ரயில்வேயில் எரியக்கூடிய மற்றும் வெடிபொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும், மேலும் ரூ. 1000/- அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.  மேலும் இழப்பு/காயம் அல்லது இதனால் ஏற்படும் சேதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.
  • ரயில் நிலையங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, ரயில் பயணிகள் ரயில்வே ஊழியர்களுடன்  ஒத்துழைத்து, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பின் (139 - உதவி எண்ணை) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
  • பட்டாசுகள் / தீப்பற்றக்கூடிய பொருட்களில் உள்ள ரசாயன கலவையானது ஒரு சிறிய தீப்பொறியால் கூட பற்ற வைக்கப்படலாம், இது ரயில்வே சொத்துகளுக்கு மட்டுமல்லாமல், பயணிகளின் விலைமதிப்பற்ற உயிர்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும். 

அனைத்து ரயில் பயணிகளும், தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட, ரயில்வேயுடன் இணைந்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow