தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயார்... மக்கள் இனி ஜாலியாக சொந்த ஊர்களுக்கு செல்லலாம்!

“தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயாராக இருக்க சொல்லியுள்ளோம், விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க உள்ளோம்” என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Oct 24, 2024 - 21:11
 0
தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயார்... மக்கள் இனி ஜாலியாக சொந்த ஊர்களுக்கு செல்லலாம்!
தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயார்... மக்கள் இனி ஜாலியாக சொந்த ஊர்களுக்கு செல்லலாம்!

வரும் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தங்களது சொந்த கார்களில் பயணிப்பவர்கள் தவிர்த்து, ரயில்கள், பேருந்துகள் மூலமாகவும் ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தீபாவளியை முன்னிட்டு ஒட்டுமொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சுமூகமான பயணத்தை மேற்கொள்வதன் வசதிக்காக ஆம்னி பேருந்துகள் உரிமையாளருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின்பொழுது கட்டண உயர்வு இல்லாமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அரசின் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் பயணிப்பவர்களின் முன்பதிவு கடந்த ஆண்டு கட்டலும் இந்த ஆண்டு குறைந்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பேருந்து உரிமையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. 

முறையாக பதிவு செய்த ஆமினி பேருந்துகள் குறைந்த கட்டணத்திலேயே பேருந்து இயக்குகின்றனர். புதிதாக பேருந்து வாங்குபவர்கள் தனியார் செயலியின் மூலம் அதிகப்படியான விலையில் டிக்கெட் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து புகார் அளிக்கும் பட்சத்தில் அரசு சார்பில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் செயலிகளில் ஆம்னி பேருந்து பயணத்திற்கு அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக அனைத்து பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை சொகுசாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே அதிகப்படியான தொகையை கொடுத்து பயணிக்கின்றனர். தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகள் தயாராக இருக்க சொல்லியுள்ளோம், விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow