Sudha Kongara : 'சாவர்க்கர்' குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்ட சுதா கெங்கரா.. என்ன விஷயம்?
Director Sudha Kongara About Savarkar : ''அந்த காலத்தில் பெண்கள் பள்ளிக்கு சென்றால் சமூகத்தினரால் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். இதற்கு பயந்து சாவர்க்கர் மனைவி வீட்டில் இருந்தபோது, சாவர்க்கர் தனது மனைவியின் கையை பிடித்து இழுத்துச் சென்று படிக்க வைத்தார்'' என்று சுதா கெங்கரா பேசியிருந்தார்.

Director Sudha Kongara About Savarkar : இந்திய திரையுலகில் முன்னணி பெண் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுதா கெங்கரா. இவரது இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான 'இறுதிச்சுற்று' திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதேபோல் இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இந்தியா முழுவதும் பட்டிதொட்டி எங்கும் 'சூரரைப் போற்று' பெரும் வரவேற்பை பெற்றது.
இப்போது இவர் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து 'புறநானுறு' என்ற படத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதில் முதலில் சூர்யா நடிக்க இருந்ததாகவும், பின்பு அவர் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாவும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கு பதிலாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
பொதுவாக அதிக சர்ச்சைகளில் சிக்காத சுதா கெங்கரா இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது அண்மையில் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் வரலாற்றை மாற்றி பேசியது சர்ச்சையாகியுள்ளது. அந்த பேட்டியில், ''நான் ஒரு வரலாறு மாணவி. நான் வுமன் ஸ்டடிஸ் படிப்பு படித்தபோது, எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர், சாவர்க்கர் கதையை கூறினார். அதாவது சாவர்க்கர் ஒரு பெரிய தலைவர். அனைவராலும் மதிக்கப்படுபவர்.
திருமணத்துக்குப் பின்னர் அவரது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அனால் அந்த பெண்ணுக்கு வீட்டில் இருப்பதற்குத் தான் பிடித்து இருந்தது. அந்தக் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள். அப்படியே பெண்கள் பள்ளிக்கு சென்றாலும் சமூகத்தினரால் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். இதற்கு பயந்து சாவர்க்கர் மனைவி வீட்டில் இருந்தபோது, சாவர்க்கர் தனது மனைவியின் கையை பிடித்து இழுத்துச் சென்று
படிக்க வைத்தார் என ஆசிரியர் என்னிடம் கூறினார்'' என்று சுதா கெங்கரா பேசி இருந்தார்.
இந்த பேட்டியை வைத்து சாவர்க்கரை புகழ்ந்து தள்ளிய பாஜக ஆதரவாளர்கள், ''இதுதான் சாவர்க்கரின் உண்மையான குணம். இது தெரியாமல் அவரை ஆங்கிலயேர்களிடம் மன்னிப்பு கேட்டார் என பலர் கொச்சைப்படுத்துகின்றனர்'' என்று சமூகவலைத்தளத்தில் கருத்துக்களை கூறி வந்தனர். ஆனால் சுதா கெங்கராவ் பேசியது பொய் என்வும் அவர் வரலாற்றை மாற்றி எழுதியதும் தெரியவந்தது.
மேலும் படிக்க: ராயன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
அதாவது ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பாய் புலேவின் வரலாற்றை சாவர்க்கரின் வரலாறு என சுதா கொங்கரா திரித்து பேசியதாக நெட்டின்சன்கள் ஆதாரத்துடன் தெரிவித்தனர். இந்நிலையில் வரலாற்றை மாற்றி பேசியதற்கு சுதா கெங்கரா மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அவர், ''என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும்.
என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில்… — Sudha Kongara (@Sudha_Kongara) July 27, 2024
அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்'' என்று விளக்கம் அளித்துள்ளார்.
What's Your Reaction?






