சினிமா

ஆஸ்கர் 2025: விருதுகளை அள்ளிக் குவித்த அனோரா.. முழு பட்டியல் இதோ

97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் இன்று நடைபெற்ற நிலையில் ‘அனோரா’ திரைப்படம் பல பிரிவுகளில் விருதுகளை குவித்தது.

ஆஸ்கர் 2025: விருதுகளை அள்ளிக் குவித்த அனோரா.. முழு பட்டியல் இதோ
ஆஸ்கர் 2025 முழு பட்டியல்

உலக சினிமாவில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்  சிறந்த படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆஸ்கர் விருது அளித்து கெளரவப்படுத்தப்படுகிறது. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான 97-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. 

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரைன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில், மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளின் முழு பட்டியல் இதோ:

சிறந்த நடிகர்கள்:

சிறந்த நடிகருக்கான விருது 'THE BRUTALIST' படத்தில் நடித்த அட்ரியன் பிராடிக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது 'அனோரா' படத்தில் நடித்த மிக்கி மேடிசனுக்கு கிடைத்துள்ளது. 

சிறந்த துணை நடிகர்கள்:

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது 'ஏ ரியல் பெயின்’ திரைப்படத்தில் நடித்த கீரன் கல்கினுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது 'எமிலியா பெரஸ்' படத்திற்காக ஜோ சல்டானாவுக்கு வழங்கப்பட்டது. 

மற்ற பிரிவுகளில் விருது யாருக்கு?

சிறந்த இயக்குநருக்கான விருது 'அனோரா' படத்திற்காக ஷான் பேக்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது 'அனோரா' படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வால்டர் சால்ஸ் இயக்கிய பிரேசில் திரைப்படமான 'I'M STILL HERE'-க்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது 'THE BRUTALIST' படத்திற்காக டேனியல் பிளம்பெர்க்-கு வழங்கப்பட்டுள்ளது. 

சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது ‘Wicked' படத்திற்காக பால் டேஸ்வெல்க்கு வழங்கப்பட்டது. 

அதேபோல், 'அனோரா' படத்திற்கு சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங் என இரு பிரிவுகளிலும் ஷான் பேக்கர் ஆஸ்கர் விருது வென்று அசத்தினார். 

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'CONCLAVE' திரைப்படம் வென்றது. இப்படத்தின் திரைக்கதைக்காக பீட்டர் ஸ்ட்ராகனுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை 'No Other Land' ஆவணப்படம் வென்றது. இது பாலஸ்தீன - இஸ்ரேல் போரை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த விஷுவல் எஃபெக்ட், சிறந்த சவுண்ட் டிசைனிங் பிரிவுகளில் 'ட்யூன் -II' விருதுகளை வென்றுள்ளது. 

எந்த படத்திற்கு எத்தனை விருது?

  • அனோரா - 5 (சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை )
  • THE BRUTALIST - 3  சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர்  
  • எமிலா பெரஸ்  - 2 (சிறந்த பாடல், துணை நடிகை, )
  • ட்யூன் பார்ட் 2 - 2 (விஷுவல் எஃபெக்ட்,  சவுண்ட் டிசைனிங், ) 
  • Wicked - 2 (சிறந்த தயாரிப்பு நிர்வாகம், சிறந்த ஆடை வடிவமைப்பு, )

இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்த பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த  'அனுஜா' குறும்படம் விருதை தவறவிட்டது. இந்தப் பிரிவில் 'I'M NOT A ROBOT' என்ற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது.