சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் - கிரிஷ் ஜோடன்கர் கருத்து
வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடன்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கிராம சீரமைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது இதற்கு அக் கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
காங்கிரஸ் கட்சியில் தற்போது கிராம சீரமைப்பு பணிகள் 40% பணிகள் நிறைவடைந்துள்ளதாக உத்தரவிட்டார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு களத்தை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் கமிட்டி ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
பாரதி ஜனதா கட்சி யுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் கட்சிகள் காலப்போக்கில் காணாமல் போய் விடுவதாக தெரிவித்த அவர் கூட்டணி கட்சிகளையும் பாரதிய ஜனதா கட்சி அழித்து விடுவதாக குற்றம் சாட்டினார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக திமுக ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் கர்நாடகா துணை முதலமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிரிஷ் ஜோடங்கர் முதலில் பாரதிய ஜனதா கட்சி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப்படும் என்று தெரிவித்ததை நிறைவேற்றட்டும் என கூறினார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்தார்.
What's Your Reaction?






