VCK General Secretory Ravikumar About Rajinikanth Political Entry : தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெருமையை பறைசாற்றும் வகையில், 'கலைஞர் எனும் தாய்' என்னும் நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, துரை வைகோ மற்றும் கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அமைச்சர் எ. வ. வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். பின்பு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ''கலைஞருடன் இருந்த மூத்த அமைச்சர்களை சமாளிப்பது கடினம் என்றும் துரைமுருகன் போன்றவர் கலைஞரின் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர்கள். அவர்களை வைத்து வேலை வாங்குவது.... "ஸ்டாலின் சார் ஹேட்ஸ் ஆஃப் யூ". என ரஜினிகாந்த் பேச்சால் கலகலப்பு பேச்சால் முதலமைச்சர் உட்பட அனைவரும் சிரித்தனர்.
கலைஞர் நினைவிடம் தாஜ் மஹால் மாதிரி கட்டியுள்ளனர். அதேபோல் திருவாரூரில் கலைஞரின் கோட்டம் மிக சிறப்பாக கட்டியுள்ளனர் என தெரிவித்துள்ளனர் இந்த பணிகளை மேற்கொண்ட எ.வ.வேலு புத்தகத்தையும் மிக அருமையாக எழுதியுள்ளார். புத்தகங்களின் விலையை குறைத்து வைத்தால் எல்லோரு வாங்கி படிப்பார்கள்.
ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் குறித்து அரை மணி நேரம் பேசினார் என்றால் அவராக பேசியிருக்க மாட்டார். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கும் என பேசினார். விமர்சனங்களை கலைஞர் எப்படி எடுத்துக்கொள்வார் என்றால் அனைத்தையும் ஆராய்ந்து பார்ப்பார். திமுகவினர் எவ்வளவு பெரிய புயலையும் எதிர்கொள்வார்கள்.
விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள். கருணாநிதி ஒரு மகான். அவருடைய புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும். கருணாநிதி குறித்து இன்னும் அதிக புத்தகங்கள் வெளிவர வேண்டும். அவர் குறித்து திரைப்படமே எடுக்க வேண்டும்'' என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘கலைஞர் என்னும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது எல்லோரது மனதையும் தொட்டது. அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்கூட என இன்று அந்த அரங்கிலிருந்த அனைவரும் ஒப்புக்கொவார்கள்.
எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டதைப் பேசும்போது அந்தப் பேச்சுக்கு ஆற்றல் அதிகம். அந்த ஆற்றல் கொண்ட ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம் என இந்த கணத்தில் எனக்குத் தோன்றியது. இன்று பலருக்கும் அப்படித் தோன்றியிருக்கலாம். பாராட்டுகள் சார் !" என்று தெரிவித்துள்ளார்.