திராவிட மாடல் ஆட்சியில் மதுரைக்கு சிறப்பு.. “மா மதுரை” விழாவில் முதல்வர் பெருமிதம்

மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் "மா மதுரை" விழாவை காணொளி வாயிலாக முதலமைச்சர் துவங்கி வைத்தார்.

Aug 8, 2024 - 10:53
 0
திராவிட மாடல் ஆட்சியில் மதுரைக்கு சிறப்பு.. “மா மதுரை” விழாவில் முதல்வர் பெருமிதம்
Ma Madurai festival

மதுரையின் சிறப்பை ஒரு நாளில் சொல்லி விட முடியாது. தூங்கா நகரம் என்று போற்றப்படும் மதுரை பல்வேறு வரலாற்று சிறப்பும் புராண சிறப்புகளையும் கொண்டது. மதுரையின் பெருமையை உணர்த்தும் வகையில் யங் இந்தியன்ஸ்’ அமைப்பின் சாா்பில் இன்று ஆகஸ்ட் 8, மற்றும் 9, 10, 11 ஆகிய நாள்களில் மாமதுரை விழா நடைபெற உள்ளது.மா மதுரை விழா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகரில் வண்ணமயமான அழகிய ஓவியங்கள், சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.மா மதுரை விழாவை சென்னை சித்தரஞ்சன் சாலை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

யங் இந்தியன்ஸ்’ அமைப்பின் சாா்பில் இன்று ஆகஸ்ட் 8, மற்றும் 9, 10, 11 ஆகிய நாள்களில் மாமதுரை விழா” நடைபெற உள்ளது. மதுரை தமுக்கம் மைதானம், லட்சுமி சுந்தரம் மகால், மகாத்மா பள்ளி, வண்டியூா் தெப்பக்குளம், மடீட்சியா அரங்கம், வைகைக் கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பொதுமக்கள், மாணவா்களுக்கு விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சுற்றுலாவை மேம்படுத்த பட்டம் விடும் திருவிழா, பலூன் திருவிழா,  அடுக்குமாடி பேருந்து பயணம், பாரம்பரிய நடைபயணம், சைக்கிள் ஓட்டுதல், உணவுத் திருவிழா, வியாபார சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகரில் வண்ணமயமான அழகிய ஓவியங்கள், சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே  மாமதுரை நிகழ்விற்கான அறிமுக பாடலை cii & யங் இந்தியன் குழுவினர் வழங்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பெற்றுக் கொண்டு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து இன்று மா மதுரை விழாவை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். மதுரை, தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் "மா மதுரை" விழாவை காணொளி வாயிலாக துவக்கி வைத்து பேசினார்.


மதுரையில் சுற்றுலா பாரம்பரியம், கலை, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.உணவு திருவிழா மற்றும் வர்த்தக பொருட்காட்சி தமுக்கம் மைதானத்திலும்,சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் மகளிர் தொழில் முனைவரால் நடத்தப்படும் பொருட்காட்சி காந்தி மியூசியத்திலும், 
பலூன் திருவிழா வைகை கரையோரத்திலும், இரண்டடுக்கு பேருந்து பவனி மற்றும் இறுதியாக மதுரை கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் அலங்கார ஊர்தி மற்றும் கலைஞர்களின் பேரணி இறுதியாக நடைபெற இருக்கிறது. 

மாமதுரை விழாவில் மொத்தம் 20 நிகழ்வுகள் நடைபெறுகிறது. மாமதுரை விழாவின் துவக்கம் இன்று காலை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்து பேசினார்.  துவக்க விழா நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியாளர், மாநகர ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சி காலத்தில் மதுரைக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்திருக்கிறோம்.சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று தெரிவித்தார். திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட இடமும் மதுரைதான். இதுபோன்ற விழாக்கள் கூட்டுறவு மற்றும் ஒற்றுமைக்கானதாக இருக்கும் என்றும் கூறினார். மதுரையில் இருந்து இருவர் அமைச்சர்களாகியுள்ளனர் என்றும் பெருமிதத்துடன் கூறினார் முதல்வர் ஸ்டாலின். 

மா மதுரை விழா குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலரும் சிறப்புடன் கூறுகின்றனர். மதுரையில் கடந்த காலப் பெருமிதத்தையும், நிகழ்காலச்சிறப்பையும் எதிர்கால நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. மதுரை என்ற மாநகரில் ஏராளமான விசயங்களை கவனிக்கும் போது பல வியப்பான விசயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

மதுரையில் இருக்கும் மரங்களுக்கு கூட வரலாறு இருக்கிறது. மதுரையின் மத்தியில் பாலமாக அமைந்திருக்கும் ஏ.வி பாலம் நூற்றாண்டு கடந்து நிற்கிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். செல்லூர் பகுதியில் உள்ள ஆலமரத்திற்கு சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடினார்கள். இப்படி ஒவ்வொன்றையும் மதுரை மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். வரலாற்றில் பதித்த சித்திரைத் திருவிழா ஆயிரம், ஆயிரம் கதைகள் சொல்லும். வைகை ஆற்றின் தென்கரையிலும், தென் கரையிலும் நடக்கும் இந்த கொண்டாட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

சென்னைக்கு மெரினா போல மதுரைக்கு வண்டியூர் தெப்பக்குளம் மிக மிக்கிய இடமாக மாறி வருகிறது. அழகர்கோயில், அரிட்டாபட்டி, கீழக்குயில்குடி, திருமலை நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம், காந்தி மியூசியம் என்று ஏராளமான இடங்களின் சிறப்புகளை இந்த திருவிழாவில் தெரிந்து கொள்லலாம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow