Chennai Rain Update : சென்னை மக்களே உஷார்.... வெளிய போகும்போது குடையை மறந்துடாதீங்க!
Chennai Rain Update : அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Rain Update : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை நீடிப்பது வழக்கம். இந்த காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.
நடப்பாண்டு பெய்து வரும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாகப் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரே மதத்தில் இயல்பாக 113.4 மிமீ பெய்ய வேண்டிய மழை, இம்முறை 177.4 மிமீ பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இயல்பை விட 56% அதிகமாகும். இதில் அதிகபட்சமாக நீலகிரியில் 866 மிமீட்டரும் குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 7.5 மிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் இரவில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலும் நிலவு வருகிறது. இயல்பாக தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே தற்போது வரை சென்னையில் 160.7 மிமீ மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் இம்முறை 340 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 112 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சென்னையில் மழை பெய்யாதது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நகரி மலைகள் / வேலூர் அருகே உருவாகும் மேகங்கள் சென்னை கடற்கரையை வந்தடையும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மேற்கு கடற்கரையில் (கேரளா, வால்பாறை மற்றும் நீலகிரி) மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: 100 வீடுகள் கட்டித் தர தயார்; ராகுல் காந்தி அதிரடி
இதைத் தவிர இன்று (2.8.2024) மற்றும் நாளை (3.8.2024) மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






