நெம்மேலியில் அமையும் 6-வது புதிய நீர்த்தேக்கம்.. தண்ணீர் பற்றாக்குறைக்கு Bye!

சென்னை நெம்மெலியில் ஆறாவது புதிய நீர்தேக்கத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இனி கோடையில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என கூறப்படுகிறது.

Mar 27, 2025 - 11:27
Mar 27, 2025 - 11:56
 0
நெம்மேலியில் அமையும் 6-வது புதிய நீர்த்தேக்கம்.. தண்ணீர் பற்றாக்குறைக்கு Bye!
நெம்மேலியில் அமையும் 6-வது புதிய நீர்த்தேக்கம்

சென்னையில் ஆறாவது புதிய நீர்த்தேக்கத்தினை அமைக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திருப்போரூர்-மாமல்லபுரம் இடையே அமைந்துள்ள நெம்மேலியில் புதிய நீர்த்தேக்கத்தை அமைக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கமானது திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியை விட மிகப்பெரிய அளவில் சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவில் கோவளம் துணைப்படுக்கை பகுதியில் உருவாக்கப்பட உள்ளது.

2.3 டிஎம்சி தண்ணீரை சேமிக்கலாம்

நீண்ட கால நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.தற்போது செம்பரம்பாக்கம், ரெட் ஹில்ஸ்  (Red hills) மற்றும் பூண்டி நீர்தேக்கங்களில் ஆண்டிற்கு 3 டிஎம்சி வரை நீரை சேமித்து வைக்கலாம். இந்த நீர்த்தேக்கங்களுக்கு அடுத்தப்படியாக புதியதாக திட்டமிடப்பட்டுள்ள நெம்மேலியில் அமைய உள்ள நீர்த்தேக்கத்தில் 2.3 டிஎம்சி வரை தண்ணீரை சேமித்து வைக்க இயலும் என நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்திற்கான மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 400 சதுர கிலோமீட்டருக்கு அதிகமாக இருக்கும் என்றும், இதன் நீர் விநியோகம் நான்கில் ஒரு பங்கு மழை நீரை பொறுத்து அமையும் என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 1,700 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போதுள்ள நீர் ஆதாரங்கள் மூலம் 1000 மில்லியன் லிட்டர் நீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிறது.

திட்டம் வகுக்க வேண்டிய கட்டாயம்

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் கணிப்புப்படி 2050-ஆம் ஆண்டில் தேவைப்படும் நீர் தேவையானது 39 டிஎம்சி. தற்போது நம்மிடமுள்ள நீர் தேக்க அளவானது வெறும் 11 டிஎம்சி மட்டுமே. கிட்டத்தட்ட 28 டிஎம்சி அளவிலான நீரினை தேக்கும் திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow