தமிழ்நாடு

Samagra Shiksha Scheme : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் என்னென்ன..? ஒரு பார்வை

Samagra Shiksha Scheme in Tamil : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 40 லட்சம் மாணவர்களும்,  44 ஆயிரம் ஆசிரியர்களும் பயன்பெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்துள்ளதால் இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

Samagra Shiksha Scheme : சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் என்னென்ன..? ஒரு பார்வை
சமக்ரா சிக்ஷா திட்டம்

Samagra Shiksha Scheme in Tamil : எஸ்.எஸ்.ஏ (SSA) எனப்படும் சமக்ரா சிக்ஷா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பள்ளிக்கல்வி சார்ந்த பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இதில், 60 சதவிகிதம் மத்திய அரசும், 40 சதவிகிதம் மாநில அரசின் பங்கு என இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பது "பி எம் ஸ்ரீ" ஸ்கூல்ஸ் திட்டத்தில் தமிழகம் இணைய மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் தற்போது சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதாப், அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நிலையில் தமிழகம் மட்டும் ஏற்க மறுத்து வருவதால் நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் என்னென்ன பணிகள் செயல்படுத்தப்படுகின்றது என்பது குறித்து பார்க்கலாம்.

 மத்திய அரசின் பங்காக இரண்டாயிரத்து 151 கோடியும், மாநில அரசின் பங்காக ஆயிரத்து 434 கோடி என மொத்தம் மூன்றாயிரத்து 585 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிறது. இதில் தொடக்கக் கல்விக்கு அதிகபட்சமாக ஆயிரத்து 564 கோடியும்,  உயர்நிலை கல்விக்கு 529 கோடியும், ஆசிரியர் பயிற்சிக்கு 571 கோடியும்  ஒதுக்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு இரண்டாயிரத்து 151 கோடி ரூபாயை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் செயல்படுத்து வரும் 11 வகையான முக்கிய செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

 
1.பாலின சமத்துவத்தை பேணுதல்

2.அனைவரையும் உள்ளடக்கிய கல்வி

3.திட்ட கண்காணிப்பு

4.அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம்

5.திறன் மேம்பாட்டு கல்வி

6.ஆசிரியர் கல்வி

7.ஆசிரியர்களுக்கான நிதி உதவி

8.அணுகுதல் மற்றும் தக்க வைத்தல்

9. விளையாட்டு மற்றும் உடற்கல்வி 

10. கல்வி தரம் மேம்படுத்தலுக்கான திட்டம்

11. திட்ட மேலாண்மை

ஆகிய 11 முக்கிய தலைப்புகளின் கீழ் சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின் முக்கிய செயல்பாடுகளும், அந்த செயல்பாடுகளை ஒட்டி செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களும் தற்போது முடங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

திட்டங்கள்

1. கஸ்தூரி பா  காந்தி பாலிக்க வித்யாலயா- இந்திய அரசால் நடத்தப்படும் குடியிருப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இது. நலிந்த பிரிவினருக்காக இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

2.ராணி லட்சுமி பாய்  ஆத்ம ரக்க்ஷா பரிஷ்கான்- மாணவிகளுக்கான தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்தல்.

3. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவசிய வித்யாலயா- தெருவோர குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் திட்டம்.

4. உடல் ஊனமுற்ற மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்வி செயல்பாடு.

5. பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துதல்.

6. பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி.

7. கலை திருவிழா.

8. கணினி ஆய்வகங்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கான ஊதியம்ள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் 40 லட்சம் மாணவர்களும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்கள்  என மொத்தம் 44 ஆயிரம் ஆசிரியர்களும் இந்த திட்டத்தில் பயன் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது மத்திய அரசு நிதி ஒதுக்க மறுத்துள்ளதால் இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.