SRH vs LSG: வெற்றி வேட்டையை தொடருமா SRH.. லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை!
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 7-வது லீக் போட்டி ஐதபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் 18-வது சீசன் கடந்த 23 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதுவரை 6 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களின் முதல் போட்டியை விளையாடி முடித்துள்ளனர். தொடர்ந்து இன்று 7-வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய முதல் லீக் போட்டியில் 286 ரன்களை ராஜஸ்தான் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இந்த போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்று, 2.20 ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. சன்ரைசர்ஸ் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறந்து விளங்குவதால் இன்றையப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவிய நிலையில், தங்களுடைய முதல் வெற்றிக்காக லக்னோ அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேருக்கு நேர்
இரண்டு அணிகளும் இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில், 4 போட்டிகளில் 3-ல் லக்னோவும், 1 போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்சமாக லக்னோ 185, சன்ரைசர்ஸ் 182 ரன்னும், குறைந்தபட்சமாக லக்னோ 165, சன்ரைசர்ஸ் 121 ரன்னும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்ச ஸ்கோர்
கடந்த சீசன் முதல் ஐபிஎல் வரலாற்றில் இமாலய ரன்களை சன்ரைசர்ஸ் ஐதரபாத் குவித்து வருகிறது. இதுவரை நடந்த 18 சீசன்களிலும், அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி மற்றும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் நிகழ்த்தியுள்ளது.
உத்தேச பிளேயிங் லெவன்
சன்ரைசர்ஸ் அணி
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அபினவ் மனோகர், அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், முகமது ஷமி, ஆடம் ஜம்பா. சிமர்ஜீத் சிங் ( இம்பேக்ட் வீரர்)
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த், திக்வேஷ் சிங்.
Read More:
TATA IPL 2025: அதிரடி காட்டிய டி காக்.. ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த KKR..!
What's Your Reaction?






