எல்லாம் கடவுளிடம் உள்ளது.. மனம் திறந்த நடிகர் சல்மான்கான்
‘சிக்கந்தர்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சல்மான்கான், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் குறித்து மனம் திறந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘தர்பார்’, ‘துப்பாக்கி’ போன்ற படங்களை இயக்கி தவிர்க்க முடியாத இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்தார்.
இவர் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சிக்கந்தர்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, ‘சிக்கந்தர்’ திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புரோமோஷன் நிகழ்ச்சி
இந்நிலையில், புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கானிடம் அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “எல்லாம் கடவுளிடம் உள்ளது. எழுதப்பட்டவை எழுதப்படவைதான்’ என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டிற்கு வெளியே பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டதால் காவல்துறையினர் சல்மாகானுக்கு பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நிழல் உலகின் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் அறிவுறுத்தலின் பேரில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
Read more
நிழல் உலக தாதாவின் சகோதரனை தட்டி தூக்கிய காவல்துறை.. நடந்தது என்
What's Your Reaction?






