ராஜஸ்தானை வீழ்த்தி அசத்தல்...தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஐதராபாத்
44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை வெற்றிடன் தொடங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அசத்தல்
18வது ஐபிஎல் திருவிழா நேற்று கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
Read more: தமிழில் பேசி அசத்திய ரவி சாஸ்திரி...அதிர்ந்த சேப்பாக்கம் ஸ்டேடியம்
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக விளையாடியது. ஐதராபாத் அணி தரப்பில் இஷான் கிஷன் 106 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் குவித்தது.
முதலிடம்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.287 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 242-6 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 70 ரன்களும், சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 2 (+2.200) புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
What's Your Reaction?






