தமிழில் பேசி அசத்திய ரவி சாஸ்திரி...அதிர்ந்த சேப்பாக்கம் ஸ்டேடியம்
“ வணக்கம் சென்னை, எப்படி இருக்கீங்க..சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என ரவி சாஸ்திரி பேசினார்

சிஎஸ்கே- மும்பை அணிகள் இடையேயான போட்டியின்போது டாஸை சுண்டும்போது ரவி சாஸ்திரி தமிழில் பேசியது ஸ்டேடியத்தில் பெரும் அதிர்வலையை எழுப்பியது.
சிஎஸ்கே -மும்பை
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
Read more: TATA IPL 2025: நம்ம சென்னை, நம்ம பாதுகாப்பு.. ‘‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’’ அறிமுகம்!
இரு அணிகளும் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று அசத்தியுள்ளன. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.முன்னதாக சிஎஸ்கே போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் குவிந்தனர்.
ரசிகர்கள் உற்சாகம்
இந்த நிலையில் இன்றைய போட்டியின்போது டாஸ் சுண்டும்போது முதலில் நான்கு வார்த்தைகளை மட்டும் தமிழில் பேசி அசத்தினார். இதனால் சேப்பாக்கம் ஸ்டேடியம் சற்று நேரம் அதிர்ந்தது.ரவி சாஸ்திரி பேசியதாவது, “ வணக்கம் சென்னை, எப்படி இருக்கீங்க..சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஐபிஎல்லில் 2 ஜெயண்ட்ஸ்கள் விளையாடுகின்றன.இரு அணிகளும் சேர்ந்து 10 கோப்பைகளை வென்றுள்ளன என தெரிவித்தார்.
What's Your Reaction?






