சிறுவன் மர்மமான உயிரிழப்பு... குடும்பத்தினர் தற்கொலை முயற்சி..!
தூத்துக்குடியில் சிறுவன் கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதாக குடும்பத்தினர் ஆதங்கத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டான்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சிறுவன் கருப்பசாமி, திங்கட்கிழமை காணாமல் போன நிலையில், மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து உடற்கூராய்வு சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆய்வில், அதிக அழுத்தம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 4 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். ஆனால், இதுவரை இவ்வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிறுவன் மர்ம மரணத்திற்கு என்ன காரணம் ? யார் செய்தார்கள் என்பது குறித்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிறுவன் வீட்டுப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது, கஞ்சா விற்பனை நடப்பதாக தாய் போலீசில் புகார் அளித்தார். சிறுவன் உயிரிழந்த தினம் கழுத்தில் செயின் மற்றும் கையில் மோதிரம் அணிந்திருந்ததாக கூறப்படும் நிலையில், நகைக்காக சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
சிறுவன் மரணம் அடைந்து 4 நாட்களாகியும் போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை மற்றும் கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதாக என்ற ஆதங்கத்தில், சிறுவனின் தந்தை கார்த்திக் முருகன், தாய் பாலசுந்தரி, தாத்தா கருத்துப் பாண்டி ஆகியோர் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.
உயிரிழந்த சிறுவனின் தாய் பால சுந்தரி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும், குற்றவாளிகளை உறுதியாக கைது செய்வோம் என்று டி.எஸ்.பி.உறுதி அளித்துள்ளார்.
What's Your Reaction?