சென்னை நகைப்பறிப்பு சம்பவம்.. முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் நடைபெற்ற நகைப்பறிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹூசைனை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

சென்னையில் நேற்று (மார்ச 25) ஒரே நாளில் 7 இடங்களில் நடைபெற்ற நகைப்பறிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மகாராஷ்ராவைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
தொடர்ந்து, கொள்ளையர்களில் ஒருவரான ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் தான் பறித்த நகைகளை தரமணி ரயில் நிலையம் அருகில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்பதற்காக போலீஸார் ஜாபர் குலாம் ஹூசைனை தரமணிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது, போலீஸை தாக்கிவிட்டு ஜாபர் குலாம் ஹூசைன் தப்பி ஓடிய நிலையில் அவரை போலீஸார் என்கவுண்டர் செய்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
கொள்ளையன் ஜாபர் மீது 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் சென்னையில் நேற்று (மார்ச் 25) நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஜாபர் குலாம் ஹூசைன் மூளையாக செயல்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைனை என்கவுண்டர் செய்த காவல் ஆய்வாளர் முகமது புகாரி ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவரை என்கவுண்டர் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
What's Your Reaction?






