மனோஜ் மறைவு வருத்தமளிக்கிறது – அண்ணாமலை இரங்கல்
துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.இதய பிரச்னை காரணமாக அண்மையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், சென்னை சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் மனோஜ் காலமானார்.
மனோஜ் பாரதிராஜா மறைவு
நடிகர் மனோஜ் தாஜ்மகால், கடல்பூக்கள், சமுத்திரம், ஈர நிலம், அல்லி அர்ஜுனா, ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் மார்கழித் திங்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் மனோஜ்.
Read more: Manoj Bharathiraja: இளம் வயதில் நடிகர் மனோஜ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் தான் சமீபத்தில் இதய பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், அவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில், மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை இரங்கல்
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், தமிழ்த் திரையுலகக் கலைஞருமான மனோஜ் பாரதி, உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.ஐயா பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை இறைவன் அவர்களுக்கு வழங்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” என பதிவிட்டுள்ளார். இதேபோல் திரையுலகை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?






