Manoj Bharathiraja: இளம் வயதில் நடிகர் மனோஜ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

Mar 25, 2025 - 21:07
Mar 27, 2025 - 13:58
 0
Manoj Bharathiraja: இளம் வயதில் நடிகர் மனோஜ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த நடிகர் மனோஜ்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ்(48) மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். இதய பிரச்னை காரணமாக அண்மையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், சென்னை சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் மனோஜ் காலமானார்.

நடிகர் மனோஜ் மறைவு

நடிகர் மனோஜ் தாஜ்மகால், கடல்பூக்கள், சமுத்திரம், ஈர நிலம், அல்லி அர்ஜுனா, ஈஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் மார்கழித் திங்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் மனோஜ். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.

Read more: Manoj Bharathiraja: பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..அதிர்ச்சியில் திரையுலகம்

இந்த நிலையில் நடிகர் மனோஜ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.

முதலமைச்சர் இரங்கல்

இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow