LPG Cylinder Price Hike : வணிக சிலிண்டர் அதிரடி விலை உயர்வு... அதிர்ச்சியில் சென்னைவாசிகள்!
Commericial LPG Cylinder Price Hike in Chennai : சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 38 அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Commericial LPG Cylinder Price Hike in Chennai : மாதந்தோறும் முதல் நாளில் சமையல் பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் எரிவாயு விலையும் உயர்த்தப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிலையாக இருந்து வருகிறது. அவ்வபோது வணிக சிலிண்டர்களின் விலை மட்டுமே அவ்வபோது மாற்றமடைந்து கொண்டு வந்தது. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 38 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று முதல் வணிக சிலிண்டர் விலை ரூ. 1,855 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை ரூ. 7. 50 உயர்ந்த நிலையில் இன்று ரூ. 30 உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: எலான் மஸ்க்கிற்கு கேட் போட்ட பிரேசில் நீதிமன்றம்... X செயலிக்கு அதிரடி தடை!
குறிப்பாக, எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படும். ஏற்கெனவே, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டது. இதையடுத்து, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் தொடர்ந்து மாற்றம் எதுவும் செய்யப்படாமல் உள்ளது. அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வர உள்ளதால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் சில மாதங்களுக்கு பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?