வாங்க சகோதரா சென்னையில் சைக்கிள் ஓட்டலாம்.. ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின், லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியை சென்னையில் வந்து சைக்கிள் ஓட்டலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

Sep 4, 2024 - 20:51
 0

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிகாகோவில் சைக்கிள் ஓட்டியதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, அண்ணா நாம் எப்பொழுது சென்னையில் ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம்  என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்திருந்த முதல்வர் ஸ்டாலின், அன்புள்ள சகோதரரே ராகுல் காந்தி , உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், ஒன்றாக சென்னையில் சைக்கிளில் சுற்றி ஆராய்வோம்.

என் பக்கத்திலிருந்து ஒரு ஸ்வீட் பாக்ஸ் இன்னும் பாக்கி உள்ளது. நாம் ஒன்றாக சைக்கிள் ஓட்டிய பிறகு  என் வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை அனுபவிப்போம் என்று பதிவிட்டுள்ளார் ஸ்டாலின். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow