மனைவியை அழைத்து வரலாம் ஆனால் ஒரு கண்டிஷன்! கிரிக்கெட் வீரர்களுக்கு BCCI ஆர்டர்...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு அவர்களது மனைவியை அழைத்து வருவது குறித்து பிசிசிஐ புதிய கண்டிஷன் போட்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு செக் வைக்கும் விதமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.....

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும், கிரிக்கெட் தான் இங்கு மிகவும் பிரபலாமான விளையாட்டாக உள்ளது. டி 20 முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரை, அனைத்து போட்டிகளும் கோடிகளில் புரள்கிறது வர்த்தகம். அதேபோல் கிரிக்கெட் வீரர்களுக்கும் பிசிசிஐ கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கிறது. இதுபோதாதென்று விளம்பரங்கள் மூலமாகவும் வீரர்களுக்கு வருமானம் கிடைக்க, ஏகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வளவு இருந்தும் பல முக்கியமான போட்டிகளில் சொதப்புவது வாடிக்கையாக காணப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் மூன்றிலுமே தோல்வியை தழுவிய இந்திய அணி, சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்யப்பட்டது ரசிர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு சீனியர் வீரர்கள் மீதும், இந்திய கிரிக்கெட் வாரியம் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கப்பட்டன.
தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மதிப்பு மிக்க பார்டர் கவாஸ்கர் டிராஃபியை இழந்து ஏமாற்றத்துடன் திரும்பியது. இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்தது. அதில் உள்ளூர் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல கட்டுப்பாடுகள் என பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன்.
இந்தநிலையில் தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த சாம்பியன் டிராஃபி கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டில் நடைபெறும் போட்டியில் விளையாட பிசிசிஐ மறுத்துவிட்டது. இந்தநிலையில் இந்திய அணிகளுக்கான போட்டி மட்டும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக துபாய் சென்ற இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக இந்திய அணி வீரர்கள் உடன் அவர்களின் மனைவி, குழந்தைகள் என குடும்பத்தினர் துபாய் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்தநிலையில் இதுகுறித்த ஒரு முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்திய வீரர்கள் சாம்பியன் டிராஃபி தொடருக்கு தங்கள் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினரை அழைத்து வர பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இத்துடன் பல நிபந்தனைகளையும் பிசிசிஐ விதித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி ஏதேனும் ஒரு போட்டிக்கு மட்டுமே வீரர்கள் தங்கள் குடும்பத்தை அழைத்து வரலாம் அதற்கு மேல் குடும்பத்தினர் உடன் வீரர்கள் தங்க அனுமதியில்லை என்று பிசிசிஐ கறாராக கூறிவிட்டதாக தெரிகிறது. மேலும், இந்திய அணிக்கான் வீரர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர், அவர்களின் பி.ஆர்.ஓ. பி.ஏ. ஆகியோருடன் பேசக்கூடாது என்று ஸ்டிரிக்டாக கண்டிஷன் விதிக்கப்பட்டுள்ளதாம்..
பிசிசிஐ-யின் புதிய கட்டுப்பாடுகள் வீரர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் டிராஃபியை வெல்ல வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் ஒரே விருப்பமாக உள்ளது.
What's Your Reaction?






