பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொகுப்பாளரானார் விஜய் சேதுபதி - எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசனை கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என்று அறிவித்தார். இந்த நிலையில் தற்போது 8வது சீசனை தொகுத்து வழங்கப்போகிறார் விஜய் சேதுபதி.

Sep 4, 2024 - 18:35
Sep 4, 2024 - 18:36
 0
பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொகுப்பாளரானார் விஜய் சேதுபதி - எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?
bigg boss tamil 8 vijay sethupathi host the program shoots bb tamil promo

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசனை கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என்று அறிவித்தார். இந்த நிலையில் தற்போது 8வது சீசனை தொகுத்து வழங்கப்போகிறார்  விஜய் சேதுபதி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும்.  பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக களம் இறங்கினார். கடந்த சில ஆண்டு காலமாக அரசியல் ஒரு பக்கம், சினிமா மறுபக்கம் 
என பயணம் செய்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்தார். இதனை அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். என்றாலும் அதைப்பற்றி கமல் கவலைப்படாமல் தொகுத்து வழங்கி வந்தார். 

பிக்பாஸ் 7வது சீசன் முடிந்த கையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்தார். படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால் பிக் பாஸில் இருந்து விலகுவதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தாலும், கடந்த சீசனில் அவர் எடுத்த முடிவுகள் கடும் விமர்சனத்துக்குள்ளானதும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.பிரதீப் ஆண்டனியை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

கமலின் விலகலால் அடுத்த பிக் பாஸ் யார் என்கிற கேள்வி என தொடங்கியது. அதன்படி சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா, நயன்தாரா ஆகியோரது பெயர்களும் அடுத்த தொகுப்பாளர் பட்டியலில் இருந்தது. அதில் இறுதியாக யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளராக களம் இறங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். 

விஜய் சேதுபதியை வைத்து அண்மையில் பாண்டிச்சேரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ சூட்டை நடத்தி முடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கடந்த சீசனில் ரூ 120 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார்.  விஜய் சேதுபதிக்கு 50 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்த சீசனில் ஷாலின் சோயா, சீரியல் நடிகர் அருண், தயாரிப்பாளர் ரவீந்தர், தொகுப்பாளர் தீபக் உள்பட பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow