GOAT: கோட் ரிலீஸாகும் தியேட்டர்களில் தவெக கொடி.. சம்பவம் செய்ய காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெளியாகவுள்ள திரையரங்குகளில் தவெக கொடியை ஏற்ற விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Aug 20, 2024 - 18:24
Aug 21, 2024 - 10:15
 0
GOAT: கோட் ரிலீஸாகும் தியேட்டர்களில் தவெக கொடி.. சம்பவம் செய்ய காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!
கோட் ரிலீஸாகும் தியேட்டர்களில் தவெக கொடி

சென்னை: வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியானது. விஜய்யின் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ள இந்த ட்ரைலர், கோட் படம் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இதனையடுத்து மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இல்லம் சென்ற தளபதி விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் அவரது மகன்களையும் சந்தித்தார். அப்போது கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜியில் நடிக்க சம்மதம் தெரிவித்ததற்கு விஜய் நன்றி கூறியதாக சொல்லப்படுகிறது. 

இதனிடையே பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தவெக கொடியை பறக்க விட்டிருந்தார் விஜய். பவுர்ணமி தினமான ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு தவெக கொடியை விஜய் ஏற்றியதாக சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (ஆக.22) தவெக கொடியை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என விஜய் அழைப்பு விடுத்துள்ளாராம். தவெக கொடி அறிமுகத்தைத் தொடர்ந்து தனது அடுத்தப் படமான தளபதி 69 அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவுள்ளதாம். 

ஒருபக்கம் கோட் ரிலீஸ், இன்னொரு பக்கம் தவெக கொடி அறிமுகம் என விஜய் ரசிகர்கள் செம ஹைப்பில் உள்ளனர். அதேநேரம் விஜய் ரசிகர்கள் இந்த இரண்டையும் சேர்த்து தரமான சம்பவம் ஒன்றை செய்ய பிளான் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கோட் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில், விஜய்யின் தவெக கொடியை ஏற்ற ரசிகர்கள் முடிவு செய்துள்ளார்களாம். அதோடு படம் பார்க்க வரும் பொதுமக்கள் மூலம் சுமார் 50 லட்சம் கொடிகளை விநியோகிக்கவும் விஜய் தரப்பில் இருந்து ஆர்டர் சென்றுள்ளதாம். அதேநேரம் திரையரங்குகளில் மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு எவ்வித அசம்பாவிதங்களும் நடந்துவிடக் கூடாது எனவும் அட்வைஸ் செய்யப்பட்டுள்ளதாம். இதுகுறித்து விஜய் ரசிகர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இந்த அப்டேட் அதிரி புதிரியாக வைரலாகி வருகிறது.  

மேலும் படிக்க - மனசிலாயோ..! வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

அதேநேரம் விஜய் ரசிகர்கள் தவெக கொடியை ஏற்றி அட்ராசிட்டி செய்தால், தியேட்டர் செல்லும் பொதுமக்களுக்கு அது இடையூறாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சும்மாவே விஜய்யின் படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது, அவரது ரசிகர்களுடன் பொதுமக்களால் அவ்வளவு ஈஸியாக படம் பார்க்க முடியாது. லியோ ட்ரைலர் வெளியாகும் போது அது சென்னை ரோகிணி தியேட்டரில் திரையிடப்பட்டது. அப்போது விஜய் ரசிகர்கள் செய்த சம்பவத்தால், சீட், ஸ்பீக்கர்ஸ் உட்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. இதில் இப்போது தவெக கொடியை வேறு ஏற்றினால் திரையரங்குகளின் நிலை என்ன ஆகுமோ என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் கோட் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் ஜானரில் பக்கா கமர்சியல் மூவியாக உருவாகியுள்ள கோட், இந்தாண்டு கோலிவுட்டில் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடிக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow