ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..!
ரயில் மூலம் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஈரோட்டில் பெண்கள் பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் பெண்கள் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவம் நாள்தோறும் நிகழ்ந்து வருகிறது.இதனை தொடர்ந்து ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டல் சம்பவத்தை தடுக்கும் வகையில் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை சார்பில் பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு குழு துவக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு ரயில் நிலையத்தில் பெண்கள் பாதுகாப்பு குழு துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கோவை உட்கோட்ட ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாபு கலந்து கொண்டார்.தொடர்ந்து ரயில் மூலம் பயணம் செய்யும் தமிழகம் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த பெண்கள் மத்தியில் பெண்கள் பயண பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் பெண்கள் பாதுகாப்பு குழுவின் நடவடிக்கைகள் குறித்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பெண்கள் இரவில் பயணம் செய்யும் போது அடையாளம் தெரியாத தனிநபரிடம் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடாது கொடுப்பதை வாங்கி சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும் பெண்கள் பயணத்தின் போது இடையூறு செய்யும் நபர்கள் குறித்து கண்காணிக்க பெண் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இதில் 1512 , 139 இலவச தொடர்பு எண் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
What's Your Reaction?






