மதுரை டூ மும்பை… வேஷ்டி ஜிப்பாவில் ஹீரோ போல அசத்தல் அட்லி.. கலக்கல் போஸ்

இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டா பக்கத்தில் வாரந்தோறும் புது புது போட்டோக்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். மதுரை திருப்பரங்குன்றத்தில் பிறந்து தற்போது மும்பையில் செட்டிலாகி பாலிவுட்டை கலக்கி வருகிறார் அட்லி. ஜிப்பா வேஷ்டி சட்டை கலக்கலாக போட்டோ எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எப்போதும் மனைவியோடு ஜோடியாக போட்டோ போடும் அட்லி இப்போது சோலோவாக பதிவிட்டுள்ளார். இயக்குநர் அட்லியின் திரையுலக பயணம் ராஜா ராணி படம் மூலம் துவங்கி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதித்த அட்லி, ஜவான் படத்தில் ஷாருக்கானை இயக்கி வெற்றிப்படமாக 1000 கோடி கிளப்பில் இடம்பெற செய்துள்ளார்.

Jul 11, 2024 - 18:21
 0
ஹீரோ போல போஸ்
8 / 8

8. ஹீரோ போல போஸ்

தனது காதல் மனைவி உடனான மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்களாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார் அட்லி. அந்த புகைப்படங்கள் பலராலும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும். புதிதாக சந்தன நிற ஜிப்பா பட்டு வேஷ்டியில் கலக்கலாக போட்டோ சூட் நடத்தி அதை சுடச்சுட பதிவேற்றியுள்ளார் அட்லி. இந்த முறை தனியாக போட்டோ எடுத்த காரணம் எதையும் சொல்லவில்லை. இயக்குநர்கள் பலரும் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் அட்லியும் விரைவில் ஹீரோவாக நடிப்பாரோ? என்று கேட்கின்றனர் அவரது ரசிகர்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow