முகேஷ் அம்பானியின் காஸ்ட்லி பிரைவெட் ஜெட்..... மாளிகை தோற்றுவிடுமாம்.. அவ்வளவு பிரமாண்டம்!

சுமார் ரூ. 9 லட்சம் கோடி சொத்துக்கு அதிபதியான முகேஷ் அம்பானி தற்போது இந்தியாவிலேயே விலை உயர்ந்த பிரைவெட் ஜெட்டுக்கு உரிமையாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

Sep 20, 2024 - 15:46
Sep 20, 2024 - 15:46
 0
முகேஷ் அம்பானியின் காஸ்ட்லி பிரைவெட் ஜெட்..... மாளிகை தோற்றுவிடுமாம்.. அவ்வளவு பிரமாண்டம்!
கேஷ் அம்பானியின் காஸ்ட்லி பிரைவெட் ஜெட்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானி செம்ம காஸ்ட்லியான பிரைவெட் ஜெட் வாங்கியுள்ள செய்திதான் தற்போது பேசு பொருளாகியிருக்கிறது. முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தங்களுக்கென தனி விமானங்கள் பயன்படுத்துவது  ஒன்றும் புதிதல்ல. ஆனால் தற்போது அப்கிரேடட் வெர்ஷன் விமானத்தை வாங்கியுள்ளார். 

1000 கோடி ரூபாய் மதிப்பில் இந்த தனியார் ஜெட்டை முகேஷ் அம்பானி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போயிங் நிறுவனத்தின் பிபிஜே 737 மேக்ஸ் 9 மாடல் (Boeing 737 MAX 9) ஆகும். இந்த விமானம் முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற வகையில் பிரத்தியேகமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் ஆகஸ்ட் வரை இந்த புதிய விமானத்தின் பரிசேதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அம்பானிக்குத் தேவையான அனைத்து வகை வசதிகளும் விமானத்தில் கட்டமைக்கப்பட்டு, அது உறுதி செய்யப்பட்ட பின்பு ஆகஸ்ட் 28ம் தேதி விமானம் டெலிவரி செய்யப்பட்டது. 

கிட்டத்தட்ட ஒரு மாளிகையில் இருந்து கொண்டு பறப்பதைப் போன்ற அனுபவத்தை இந்த விமானம் தரும் என சொல்லப்படுகிறது. பெரிய அளவிலான மாஸ்டர் பெட்ரூம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் இருக்கிறதாம். இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு முன்பாக இந்த விமானம் ஜெனிவா, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் பறக்க விட்டு சோதனை செய்யப்பட்டது. 220 பயணிகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தில் இனி முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் மட்டுமே பறக்க இருக்கின்றனர். 

சுமார் ரூ. 9 லட்சம் கோடி சொத்துக்கு அதிபதியான முகேஷ் அம்பானி தற்போது இந்தியாவிலேயே விலை உயர்ந்த பிரைவெட் ஜெட்டுக்கு உரிமையாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இந்த விமானம் தற்போது டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இரண்டு என்ஜின்களை கொண்ட விமானத்தில் ஆடம்பர வசதிகள் செய்வதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் முகேஷ் அம்பானி செலவு செய்துள்ளாராம். ஒரு முறை விமானத்தை எடுத்தால் 11,770 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது இந்த போயிங் விமானம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow