எல்லாம் கட்டுக்கதை.. கடவுள் பெயரில் அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடு.. கொந்தளித்த ஜெகன்மோகன்

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுளை ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.

Sep 20, 2024 - 15:51
 0
எல்லாம் கட்டுக்கதை.. கடவுள் பெயரில் அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடு.. கொந்தளித்த ஜெகன்மோகன்
jagan mohan reddy

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக சந்திரபாபு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.ஆந்திராவில் வெள்ள சேதம் ஏற்பட்டதை மறைத்து திசை திருப்பவே லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.  

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார். இதையடுத்து, லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் குஜராத் ஆய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் நெய்யில் 37 சதவீதம் கொழுப்பு கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஜெகன் மோகன் ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கி பெறப்பட்ட நெய்யில் சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ், ராப்சீட், ஆளி விதை, பருத்தி விதை, மீன் எண்ணெய், பாமாயில் மற்றும் மாட்டிறைச்சி, பன்றி கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு வரும் புதன்கிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என ஆந்திர உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தமிழகத்தின் திண்டுக்கல்லை சேர்ந்தது எனவும், ராஜ் பால் என்ற பெயரில் பால் சப்ளை செய்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஜூன் மாதமே ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் தரமற்ற நெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. திருப்பதியில் லட்டு செய்வதற்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம் கருப்பு பட்டியலில் வைத்ததோடு, இருப்பில் இருந்த நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

இந்த நிலையில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலப்பு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிக்கை கோரினார். திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதனிடையே லட்டு விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை அளிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இன்று மாலைக்குள் முழுமையான அறிக்கை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனிடையே தன் மீது சந்திரபாபு நாயுடு வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் சந்திரபாபு நாயுடு முடக்கி விட்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கடவுள் பெயரால் அரசியல் செய்கிறார் சந்திரபாபு நாயுடு. 6 மாதங்களுக்கு ஒருமுறை நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 18 முறை தரமில்லாத நெய்  சப்ளை செய்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி பட்டது. நெய் கொண்டு வரப்பட்ட லாரிகள் அனைத்தும் என்ஏபிஎஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow