ஆம்ஸ்ட்ராங் கொலை..அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Sep 20, 2024 - 15:19
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை..அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது
armstrong murder 15 accused detained under goondas act

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட  வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 15 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. அதன்படி வழக்கறிஞர்களான ஹரிகரன், பொற்கொடி, சதீஷ்குமார், ஹரிதரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை, அதிமுக முன்னாள் நிர்வாகி மலர்கொடி உள்ளிட்ட 15 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 05.07.2024 அன்று மாலை. K-1 செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரிகள் 1.கு.ஹரிகரன்,வ/27, த/பெ.குமார். பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை 2.மலர்கொடி, வ/49, க/பெ.சேகர் (எ) தோட்டம் சேகர், திருவல்லிக்கேணி, சென்னை 3.சதீஷ்குமார், வ/31, த/பெ.குமரேசன், திருநின்றவூர். சென்னை 4.கோ.ஹரிஹரன், வ/37, த/பெ.கோதண்டராமன். கடம்பத்தூர், திருவள்ளூர் மாவட்டம் 5.அஞ்சலை, வ/51, க/பெ.முத்து, புளியந்தோப்பு, சென்னை 6.சிவா, வ/35, த/பெ.பாலகிருஷ்ணன், காமராஜர் சாலை, சென்னை, 7.பிரதீப், வ/28, த/பெ.திருநாவுக்கரசு, பெரம்பூர், சென்னை 8.முகிலன், வ/32, த/பெ.வின்சென்ட், கோடம்பாக்கம், சென்னை 9.விஜயகுமார் (எ) விஜய், வ/21, த/பெ.நாகராஜன், கோடம்பாக்கம், சென்னை 10. விக்னேஷ் (எ) அப்பு, வ/27, த/பெநாகராஜன், கோடம்பாக்கம், சென்னை 11.அஸ்வத்தாமன், வ/31, த/பெ.நாகேந்திரன். வியாசர்பாடி, சென்னை 12.பொற்கொடி, வ/40, க/பெ.சுரேஷ் (எ) ஆற்காடு சுரேஷ், பொன்னை, ராணிப்பேட்டை மாவட்டம் 13.ராஜேஷ், வ/40, த/பெ.லோகநாதன். கோடம்பாக்கம், சென்னை 14.செந்தில்குமார் (எ) குமரா, வ/27, த/பெ.வள்ளிக்கண்ணன், கோடம்பாக்கம், சென்னை 15.கோபி, வ/23, த/பெ.ரவி, கே.கே.நகர், சென்னை ஆகிய 15 நபர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப. அவர்கள் நேற்று (19.09.2024) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 15 எதிரிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏற்கனவே மேற்கண்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 எதிரிகள் கடந்த 07.09.2024 அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow