Miss India Worldwide 2024: உலகளாவிய இந்திய அழகியாக 24 வயது மாணவி தேர்வு.. பாலிவுட் நடிகையாக விருப்பம்!
டீன் பிரிவினருக்கான போட்டியில் தென் அமெரிக்காவின் குவாடலூப்வை சேர்ந்த சியரா சுரெட் (Sierra Suret)வெற்றி வாகை சூடினார். நெதர்லாந்தை சேர்ந்த ஸ்ரேயா சிங் 2வது இடமும், ஷ்ரதா டெட்ஜோ 3வது இடமும் பெற்றனர்.
வாஷிங்டன்: இந்தியாவுக்கு வெளியே நீண்டகாலமாக Miss India Worldwide என்ற அழகிப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நியூயார்க்கில் உள்ள இந்திய-அமெரிக்கர்களான நீலம் மற்றும் தர்மாத்மா சரண் ஆகியோர் தலைமையிலான இந்திய விழாக்குழு இந்த போட்டியை நடத்தி வருகிறது. இந்நிலையில், Miss India Worldwide 2024 அழகிப்போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற துருவி படேல் (Dhruvi Patel)என்ற இந்திய வம்சாவளி மாணவி உலகளாவிய இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் தென் அமெரிக்காவை சேர்ந்த லிசா அப்டோல்ஹாக் 2வது இடத்தையும், நெதர்லாந்தை சேர்ந்த மாளவிகா ஷர்மா 3வது இடத்தையும் பிடித்தனர். இந்த போட்டியின் Mrs category பிரிவில் டிரினிடாட் மற்றும் டொபாகோவை சேர்ந்த சுஆன் மவுட்டெட் (SuAnn Mouttet)வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை சினேகா நம்பியாரும், மூன்றாம் இடத்தை இங்கிலாந்தின் பவன்தீப் கவுரும் பிடித்து அசத்தினர்கள்.
டீன் பிரிவினருக்கான போட்டியில் தென் அமெரிக்காவின் குவாடலூப்வை சேர்ந்த சியரா சுரெட் (Sierra Suret)வெற்றி வாகை சூடினார். நெதர்லாந்தை சேர்ந்த ஸ்ரேயா சிங் 2வது இடமும், ஷ்ரதா டெட்ஜோ 3வது இடமும் பெற்றனர். உலகளாவிய இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24 வயதான துருவி படேல், அமெரிக்காவில் கணினி தகவல் அமைப்பு (Computer Information System)படிப்பை படித்து வருகிறார்.
இந்த வெற்றியால் பெருமிதம் அடைந்துள்ள அவர் பாலிவுட் நடிகையாகவும், UNICEF தூதராகவும் பொறுப்பேற்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து நெகிழ்ச்சியுடன் பேசிய துருவி படேல், ‘’உலகளாவிய மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றது எனக்கு மிகப்பெரும் மரியாதை, கவுரவத்தை அளித்துள்ளது. இது பாரம்பரியம், என்னுடைய மதிப்பு மற்றும் என்னுடைய வாய்ப்புகளை பிரதிபலிப்பது மட்டுமின்றி உலக அளவில் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய இந்திய அழகி போட்டியில் வெற்றி பெற்ற துருவி படேலுக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா வம்சாவளியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?