கனமழை எதிரொலி – நேபாளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நேபாளத்தில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனை தொடர்ந்து தலைநகர் காத்மாண்டுவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 36 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர் கனமழையால் அங்குள்ள பல ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் அங்கு கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
What's Your Reaction?






