திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற நெய்.. கருப்பு பட்டியலில் திண்டுக்கல் A.R. டைரி நிறுவனம்.. விளக்கம் இதுதான்!

திருப்பதியில் லட்டு செய்வதற்கு தரமற்ற நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்ததோடு இருப்பு நெய்யையும் திருப்பதி தேவஸ்தானம் திருப்பி அனுப்பியுள்ளது.

Sep 20, 2024 - 13:02
Sep 20, 2024 - 13:57
 0
திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற நெய்.. கருப்பு பட்டியலில் திண்டுக்கல் A.R. டைரி நிறுவனம்.. விளக்கம் இதுதான்!
tirupati laddu ghee

எங்களது நெய்யின் தரத்தை உறுதி செய்ய எந்த ஆய்வுக்கு உட்பட தயார் என்று திண்டுக்கல்லை சேர்ந்த A.R. டைரி நிறுவனம் கூறியுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் எழுப்பிய கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக பதில் அளித்து வருகிறோம் என்றும் A.R. டைரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு உயர் தரத்துடன் தயாரிக்கப்படுகிறது.10 நாட்களானாலும் கெடாமல் இருக்கும் இதனால் பலரும் 10 முதல் 20 லட்டுக்கள் வரை வாங்கி செல்வார்கள். அண்மையில் லட்டின் தரம், சுவை குறைந்துள்ளதாகவும் விரைவில் கெட்டுபோவதாகவும் பக்தர்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது.

தரமான நெய்யைக் கொள்முதல் செய்ய நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய், தேசிய அங்கீகார வாரியத்திற்கு ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டு தரம் பரிசோதிக்கப்பட்டது.

அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் நெய்யில் வனஸ்பதி கலக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து அந்த நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.அந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட நெய் திருப்பி அனுப்பப்பட்டதுடன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேவஸ்தான தலைமை அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்தார்.

கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய  சியாமள ராவ்,தரமான லட்டை தயாரிப்பதில் மிகவும் கவனமாக செயல்படுகிறோம். சேர்க்கும் பொருள்களில் கலப்படம் இருந்தால் லட்டின் தரம் பாதிக்கப்படும். லட்டு பிரசாதத்துக்கு டெண்டர் எடுத்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் தரமற்ற நெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. 

பொதுவாக நெய்யை வாங்கும்போது எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உள்ளிட்ட சான்றிதழ்கள் வைத்திருக்கிறதா என்று பார்ப்போம். சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே பரிசோதனை செய்வோம். அந்த வகையில் இந்நிறுவனத்துக்கு 8.50 லட்சம் லிட்டர் நெய் வழங்க ஆர்டர் கொடுத்திருந்தது தேவஸ்தானம். இதுவரை இந்நிறுவனம் 68,000 கிலோ நெய்யை அனுப்பியுள்ளது. இதில் 20,000 கிலோ நெய் மிகவும் தரமற்றதாக இருந்ததால் திருப்பி அனுப்பி வைத்துள்ளோம். நெய்யில் வனஸ்பதியை கலந்திருப்பது எங்கள் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.லட்டின் தரத்துக்குச் சுத்தமான பசு நெய் முக்கியம். லட்டுக்கான மூலப் பொருள்களுக்காக செலவிடப்படும் 500 கோடி ரூபாயில் ரூ. 250 கோடி நெய்க்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.

5 நிறுவனங்கள் தேவஸ்தானத்துக்கு தரமான நெய்யை அனுப்ப டெண்டர் எடுத்துள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த டெய்ரி நிறுவனம் அனுப்பிய 20,000 கிலோ கலப்பட நெய்யை திருப்பி அனுப்பிவிட்டோம். இந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைத்திருக்கிறோம். அத்துடன் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இந்நிறுவனம் மீது கிரிமினல் நடவடிக்கையும் மேற்கொள்ள இருக்கிறோம். தேவாஸ்தானத்துக்கு நெய்யை வழங்கும் பிற நிறுவனங்களையும் கலப்படம் இல்லாமல் வழங்க எச்சரித்திருக்கிறோம் என சியமளராவ் தெரிவித்துள்ளார்.

பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருள்களைப் பரிசோதிக்க வசதியாக, திருமலையில் அதிநவீன ஆய்வகமும் விரைவில் அமைக்கப்படும். அதற்காக வெளிநாடுகளில் இருந்து உபகரணங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் மிருகக் கொழுப்பு மீன் எண்ணெய் போன்றவை கலக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது ஏழுமலையான் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள  A.R. டைரி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எங்களது நெய்யின் தரத்தை உறுதி செய்ய எந்த ஆய்வுக்கு உட்பட தயார், திருப்பதி தேவஸ்தானம் எழுப்பிய கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக பதில் அளித்து வருகிறோம்  என்றும்  A.R. டைரி நிறுவனம் கூறியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ ஆர் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய் தரமானதே  என்று ஏஆர் ஃபுட் பேக்டரி நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் லெனி மற்றும் கண்ணன் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் ஏ ஆர் நிர்வாகத்தின் நபராக நான் முன்பு நின்று பேசிக் கொண்டு வருகிறேன் தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பியது ஜூன் ஜூலை என இரண்டு பாகங்கள் தொடர்ச்சியாக அனுப்பியுள்ளோம். தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது

தற்போது நிறுவனத்தின் மீது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு செய்தி வந்து வருகிறது அதில் எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை அதில் உள்ள செய்திகளை வைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.எங்களுடைய தயாரிப்பில் குறை இருப்பதாக வெளிப்படுத்தும் பட்சத்தில் இருந்தால் எங்களது நெய் எல்லா இடத்திலும் உள்ளது அதனை செக் செய்யலாம் அதன் தரத்தை எந்த குறைபாடுகளும் இல்லை.எங்கள் நிறுவனத்தின் மீது தொடரப்படும் குற்றங்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக எங்களது நிறுவனத்தின் பொருள்களை செக் செய்து கொள்ளலாம்

25 வருடத்திற்கு மேல் இந்த துறையில் இருந்து வருகிறோம் இந்த மாதிரி எங்களது பொருட்களின் தரத்தை இப்படி வெளிப்படுத்துனது கிடையாது. இது எங்களின் விளக்கம்.எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம்.ஏ.ஆர். தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரி கண்ணன்.எங்களது பொருட்கள் பல இடங்களில் விற்பனைக்காக உள்ளது அங்கு சென்று எங்களது பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

எங்களது ஆய்வுக்கூடத்தின் அறிக்கை எங்களிடம் உள்ளது மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் பொழுதும் தர கட்டுப்பாட்டு துறை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதில் எங்களது ஆய்வு அறிக்கையையும் அனுப்பியுள்ளோம்.லட்டு தயாரிப்புக்காகவே நெய் அனுப்பப்பட்டது. அங்கு ஒப்பந்தம் போடப்பட்டது நெய் அனுப்பப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய பல பேர் உள்ளனர் அதில் நாங்களும் ஒருவர்.

நாங்கள் அனுப்பியது 0.1 சதவீதம் கூட கிடையாது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும் நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது அவர்கள் கூறிய பின்பும் தற்போது மீண்டும் பரிசோதனை செய்துள்ளோம். தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது. அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை ஆனால் எங்கள் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளன.

எங்களிடம் எங்களது ஆய்வுக்கான அறிக்கைகளும் திருப்பதி தேவஸ்தானத்தின் ஆய்வு அறிக்கைகளும் உள்ளன.உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஐஎஸ்ஐ அக்மார்க் ஆகியோர் எங்களிடமிருந்து சாம்பிள் எடுத்து சென்றுள்ளனர் அதில் இதுவரை எந்த ஒரு குறைகளும் இல்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow