பாலச்சந்தர் பற்றி விமர்சிப்பதா? சுசித்ரா மீது பாய்ந்த திரைப்படஇயக்குநர்கள் சங்கம்

பாலச்சந்தர் அப்படிப்பட்டவர்தான் என்று சுசித்ரா கூறியுள்ளதற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. யாரும் யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும்.

Sep 20, 2024 - 12:20
Sep 20, 2024 - 13:29
 0
பாலச்சந்தர் பற்றி விமர்சிப்பதா? சுசித்ரா மீது பாய்ந்த திரைப்படஇயக்குநர்கள் சங்கம்
directors association condemns singer suchitra

மிகப்பெரிய விருதுகளை பெற்று தமிழ் திரை உலகிற்கே பெருமை சேர்த்தவர் திரு.கே.பாலச்சந்தரின் புகழை கெடுக்கும் வண்ணம் பாடகி சுசித்ரா  அவதூறாகவும்,  களங்கப்படுத்தும் விதமாகவும்  பேட்டி கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும் என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கை மலையாள சினிமா உலகில் பெரும் புயலை வீசியது நடிகர்கள், இயக்குநர்கள் பலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரை உலகிலும் தற்போது மீ டூ புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.இந்த நிலையில் பாடகி சுசீத்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலச்சந்தர் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கே பாலச்சந்தர் சாகுற வரைக்கும் அப்படிப்பட்ட ஆள் தான்
என்று கூறியிருந்தார் சுசித்ரா.

இப்போது இருக்கும் நபர்களை பற்றி மட்டும் பேசாமல் மறைந்த இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் பற்றியும் ஒரு திடுக்கிடும் தகவலை சொல்லியிருக்கிறார். பாலசந்தர் பெண்கள் விஷயத்தில் தவறான எண்ணம் கொண்டவர் என்றும், சாகும் வரை அவர் அந்த குணத்தோடு தான் இருந்தார் என்றும் பேசியிருக்கிறார்.
இவர் பேசிய இந்த விஷயம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களை எடுத்தவர் பாலச்சந்தர். அவரைப்பற்றி பேசியது திரைப்பட இயக்குநர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுசித்ராவிற்கு கண்டனம் தெரிவித்து திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு திரைப்பட உலகில் சமீபத்தில் திரை உலகத்தை சார்ந்தவர்களே திரை உலக கலைஞர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிலரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதும் யூகத்தின் அடிப்படையில் தவறான செய்திகளை பரப்புவதும் வழக்கமாகி உள்ளது.

தமிழ்த்திரை உலகில் என்றும் அழிக்க முடியாத புகழையும், திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்க கூடிய போற்றக்கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள். தேசிய விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே போன்ற மிகப்பெரிய விருதுகளை பெற்று தமிழ் திரை உலகிற்கே பெருமை சேர்த்தவர் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள்.

அவரின் புகழை கெடுக்கும் வண்ணம் தற்பொழுது பாட திருமதி.சுசித்ரா அவர்கள் திரு.கே.பாலசந்தர் அவர்களை பற்றி அவதூறாகவும், அவர் புகழை களங்கப்படுத்தும் விதமாகவும் ஒரு பேட்டி கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். யாரும் யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும். 

இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும். இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களை பேட்டி என்ற பெயரில் அவரின் புகழை களங்கப்படுத்திய பாடகி திருமதி.சுசித்ரா அவர்களை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow